Thursday 24 December 2015

பாராட்டுக்கள் இன்பம் தரும்

மகிழ்வான இதயங்கள் கண்டு - என்
மனமோ நல் இசைமீட்டி பாடும்அன்போடு
முகிழ் மாலைமலர் மென்மைபோலும் - என்
முகம்மீது புன்னகை இழைந்தோடச்செய்யும்

குழைவான கனிவான எண்ணம் - அதைக்
கொள்வதே பலகோடி வரமான தொன்று
மழையோடி மணல்மீது சென்று - அது
மறைந்தோடி இருந்தாலும் மண் ஈரமன்றோ

குழல் ஊத விரல் மூடல் வேண்டும் - அக்
குரலான திசைகூட்டி அதனூடு ஓடும்
அழலான தெரிந்தாலும் அன்பு -  என்றும்
அதனாலே புடம்போடபொன்னென்ப தாகும்

விழிகூறும் கதை நூறு பொங்கி - அதில்
விழுகின்ற துளியான தொரு சேதிசொல்லி
அழியாது அன்பெனும் வேள்வி -இன்று
அதைமீறி எழுகின்ற தீயாகி நில்லு

தொலையாது நிலவான தெங்கும் . - அது
தூங்கிடும் மறுநாளில் துள்ளி வானோடும்
கலையான தொருமூச்சு என்றும் -இக்
கலையான நிதம்வந்து கற்பனைகூட்டும்

மலரான தெழில்மாலை பூக்கும் -இதில்
மனமின்பம் கொண்டிட இளங்காற்றுவீசும்
சிலராகம் செவியின்பம் கூட்டும் - வரும்
சில்லென்ற தென்றலில் மனம்நின்று தோற்கும்

பெருவானில் குயிலோசை கேட்கும் - அது
பிறைவானில் எழுந்தோடி அது என்ன பார்க்கும்
நிறைவான ஒளிதந்து நாளும் - நிலா
நின்றிடும் சுற்றியே உலகோடு வாழும்
23.09.13

தலைவன் ஏக்கம்

மொட்டு மலர்வதென் றிட்ட உன்புன்னகை
மொத்தம் வலிதரும் பூங்கணையோ
வட்ட விழித்துப்பொன் வண்ணநிலவிடை
வந்தயல் நிற்பது சொப்பனமோ
எட்டி அணைத்திட விட்டு நகர்ந்தனை
ஏதுமனங் கொண்ட கற்பனையோ
கொட்டும் குழவியென் றெட்டியும் கிள்ளிட
என் நிலைசுற்றிடும் பம்பரமோ

வெட்டும் விழிகளும் நட்ட நடுச்சுனை
வெள்ளியலை துடிப்பென்றிடவோ
பட்டுமலர்முகை பார்த்துக் குனிந்தன
பாவையுன் னோடிழை பொன்னழகோ
விட்டெனை நீமனை பஞ்சணைதூங்கிட
வேதனை கொண்டு நான்ஏங்குவதோ
தொட்டுவிட எண்ண தொல்லிடம் சேருவை
கிட்டவர வெட்கம் கொல்லுவதோ

சுட்டவெயிலெனப் பட்ட துயருடல்
செக்கச் சிவந்திட வான்மகளோ
விட்டுயர் வான்மதி வேண்டி யுலகதன்
வீதிவந் தாளென எண்ணிடவோ
முட்ட மனம்களிப் பெய்தல் கலயத்தில்
மொண்டு நிரப்பிய தண்புனலோ
இட்டவிதி இன்னும் ஏழைநீ வாடென
ஈவிரக்க மின்றிச் சொல்லுவதோ

கொட்டும் மழைவிழக் குட்டை குளமெங்கும்
கூடி வழிந்தோடும் வெள்ளமன்றோ
கிட்ட வந்தவளே இட்ட உணர்வென்ன
வட்டமதி தரை இறங்கியதோ
மொட்டை மலையிடை வீழ்நதியோ அது
முன்னெழுஞ் சாரல்த ருங்குளிரோ
கட்டியணைத்திடக் கையெழுமோ அதைத்
தட்டிவிட் டோடுவ தும்தகுமோ

பொட்டிடும் மாடத்துப் பொற்கிளியே நிதம்
பூரிப் பெழும்நகை கிண்கிணியோ
முட்டி எனைவீழ்த்த இரட்டை புரவியில்
மூர்க்க மெழும் பெண்மை வந்திடுமோ
பட்ட கணைமதன் விட்டவிழியம்பு
திட்டமிட்டே எனைத் தள்ளுவதோ
முட்டைவிழி வேலைக் கொண்டு இதயத்தில்
மோகினி நீவலி செய்திடவோ

முட்டும் காளையெனை மீள எழலின்றி
மென்மை எதிர்கொள்ள அஞ்சுகிறேன்
சட்டை செய்யாதுநீ போவதென்ன - என்னைச்
சஞ்சலத்தில் கைகள் கட்டுவதேன்
செட்டை கொண்ட பலபட்சியினம் விண்ணில்
வட்ட மடிப்பது போல இன்றோ
அட்ட திசையிலும் கொட்டி மலர்தூவ
ஆரணங்கே வலம் வந்திடுவோம்

காலமெனும் மருந்தே உதவும்


எழிலுற உலகும் இயற்கையென் றுறவும்
எமதிடை படைத்தவளே
அழிவுற உடலும் அதிலொரு உயிரும்
அகிலத்தி லாக்கி வைத்தாள்
பொழிலெழு அலையாய் புரள்நிரை வடிவில்
புதுப்புது அனுபவங்கள்
கழிவுறு மனமும் கவிமர முலவும்
கடையுணர் வுடனீந்தாள்

பழியுறப் பகையும் பருவத்தில் மெருகும்
பழமெனக் கனிமனமும்
வழிஎனப் புதர்கொள் வகைபல தடையும்
விதியென வாழ் வமைத்தாள்
குழிபல நடையும் கொளுமிருள் வழியில்
கிடவெனப் பலசமைத்தாள்
பிழியென இதயம் பிரளய வடிவில்
பெருந் துயருற அமைத்தாள்

வழிநடை நெடுகில் வதமிடும் வகையில்
வாழ்வியல் கொடுமையுடன்
தெளிவில இருளும் திசையறு பயணம்
தெரியென அறிவழித்தாள்
மொழிந்திவர் உறவும் முதிர்கனி மரமும்
முடிவினில் நிலம் விழுமாய்
அழிவுற வரமும் அவனியில் விதியாய்
ஆக்கியும் புதிர்விளைத்தாள்

மலையென திடமும் மனதினில் பெரிதும்
மகிழ்வினைத் தருமிவளே
வலையென அன்பும் வரும் பல உறவும்
வரைந்தொரு வாழ்வமைத்தாள்
நிலையெம தன்னை நெறிகொளும் தந்தை
நியதியென் றெமைக் காத்து
விலையறு வாழ்வை விதைத்தவள் பிரிவை
வேண்டுமென் றெமக் களித்தாள்

கலக்கமும் வேண்டாம் கடுந்துயர் போதும்
கடிதெனும் நிலையிதுதான்
உலகிடை எவரும் இலையென உணரும்
ஒரு பெருந்துயர் சமமே
விலகிடும் கவலை வெளியெனு மண்டம்
விளைத்தவள் காலமெனும்
அலகிடும் மருந்தை அளித்தனள், அருந்த
அதிமன துயரழியும்

*************

பூவாக மலரச்செய்

      பூவாக மலரச்செய்

நீயே சக்தி நிறைவா யெங்கும்
நினைவில் அன்பைத்தா
காயாய் அன்றிக் கனியா யினிமைக்
கவிதை வளமும்தா
தாயே உன்னைத் தினமும் வேண்டித்
தவித்தேன் துவளாமல்
வாயால் இன்பத் கவிதை சொல்லும்
வளமும் வரமும் தா

சேயாய் என்னைத் தினமும் காலை
தென்றல் போல்நீவி
பாயாய் படரும் பச்சைப் புல்மேல்
பனியின் குளிர்கொண்டு
தீயாய் சுடரோன் செம்மை, வானத்
திங்கள் செய் குளுமை
தா யார் எந்தன் தமிழின்கவிதை
தன்னைக் கண்கொண்டால்

தோயாதுன்பம் துய்த்தலின்றித்
திகழும் கவியின்பம்
தேயா தினிமை சேர்ந்தோர் பாகாய்
தித்திப் பெனவாக்காய்
ஓயா தூற்றும் அருவிக் சாரல்
அதனில் கீழ்நின்றே
தூயோர் இன்பம்கொள்ளல் போலும்
தொன்மை வளமும் தா

சாயா விதியும் சரியா மனமும்
சாகாதுடல் கொண்டே
நீயாய் எந்தன் நினைவில் வந்தே
நீந்தும் அலைதானும்
ஒயா துள்ளும் அழகும் கொண்டே
உவகைப் பெருக்கோடு
காயாதென்னைக் காப்பாய், இன்பக்
கவிதை  வளமும் தா

கூவாக் குயிலும் குதியா நதியும்
கொட்டா மழைமேகம்
தாவாக் குரங்கு தழுவாப் பிள்ளை
தனிமைச் சுகமில்லை
ஏவாய் என்னை எட்டும்வரையும்
இன்பத் சுனை யாக்கி
நீவா, கருணை நேரும் வாழ்வில்
நிதமும் கவிதை தா

என்ன செய்வது?

சக்கரத்தைப் பேய்கள் கண்டு சுற்றிச் சுற்றி ஆடியுமென்
சக்தி நீதி தெய்வசீலம் தானறிவாரோ
பக்தி கொள்ளும்கோவிலென்று பார்க்குமோ விலங்குவந்து
பாதிபூசை யில்நுழைந்தால் பட்டதுபாடே
விக்கிரத்தில் தெய்வம்கண்டு வீதிவலம் சுற்றிவந்தும்
வேண்டும்தமிழ் வாழ்வுகாண வில்லங்கம் ஏனோ
சக்திதெய்வம் எங்கள்வாழ்வு சார்ந்து நின்று காக்குமென்று
சற்று கண்கள் தூங்கிவிட்டோம் சஞ்சலம் ஏனோ

உக்கிரமென் றுள்ளேவந்து ஓடு சுவர் இல்லமெங்கும்
ஊழிவினைக் காற்றுடைத்து வீழ்த்திடலாமோ
அக்கா தம்பி தங்கை யென்று அத்தனையும் தெய்வமனை
ஆண்டுகளாய்க் கொண்டிருந்தோம் இன்றிலையேனோ
விக்கினத்தைச் செய்யவென்று வேண்டியவர் வந்துநிற்க
விட்டிருந்து வேடிக்கையும் பார்ப்பது உலகோ
சிக்கலுக்குத் தீர்வுஎன்ன, சுற்றுடை வாள் கொண்டவர்கள்
சத்திரத்தில் விட்டுப் பிச்சை யோடுதந்தாரோ

எக்கரத்தை தூக்குவதாம் இரந்திடவா எழுந்திடவா
ஏழரைமீ தேறிநின்றும் ஆடுது விதியே
விக்கிர மாதித்தனவர் வீரமார்பில் தொங்கிவினா
வேடிக்கைவே தாளம்கேட்க விடையுளதாமோ
மக்கனுக்கு  காதினிலே மந்திரத்தை ஓதியென்ன,
மறுபடியும் மறுபடியும் மறந்திடுவானே
சக்கைபோடுபோட்டவரைச் சந்தியிலே வைத்தழித்துச்
சாக்கில் கட்டி வீசுகிறார் சாய்ந்திடலாமோ

அக்கிரமம் காணுதென்றே ஆறுகுளம் தாண்டியெங்கும்
ஆனதேசம் காடுமலை கத்திவந்தோமே
விக்கினத்தைவேண்டிப் புவி வேண்டுமென்றே தூங்கிவிட்டால்
விட்டுமவர் கண்விழிக்கப் பார்த்திடல்வீணே
அக்கம்பக்கம் யார்துணைகாண் ஆற்றலெலாம் நாட்டிலன்றி
அத்துமீறீ வந்திடுவர் என்பது கனவே
சுக்கு மிளகு திப்பிலியா சுட்ட காய்சால்போக இது
சொட்டி இரத்தம் கீழ்வழியும் வேறிதுதானே

எத்தனை நாள் காத்திருக்க ஏடெழிதிப் பாட்டிசைத்து
இட்ட சுரவாத்தியங்கள் ஏந்திடுமுலகே
அத்தனைக்கும் பக்கஇசை அங்கிருந்து கேட்குதய்யா
ஆடழிக்க முன்னரெழும் இன்னிசை தானோ
சொத்து மண்ணை விட்டபின்பு சொர்க்கமெங்கு காணவென்று
சுற்றமுடன் சேர்ந்து மொன்றாய் சென்றிடலாமோ
சத்தமின்றி ஒன்றிணைந்து  சத்தியத்தின் சக்தியோடு
சட்டமிட்டு நம்பலத்தை காத்திடுவோமோ 

---------------------

கண்டதெல்லாம் துயரமே!






     ( கெட்ட காலக்கனவு)

வெள்ளி யொன்று நிலம் வீழக்கண்டேன் - அடி
வெட்டி மரமொன்று சாயக்கண்டேன்
கொள்ளிவைத்து மனை கூரையெங்கும் - எரி
கொண்டு தீயுமெழக்காட்சி கண்டேன் 
அள்ளிவைத்த முத்து இரத்தினங்கள் - தனை
ஆற்றில் எறிந்திடலாகக் கண்டேன்
தள்ளியெமை வைத்து தானுமுனைக் - கொள்ளத்
தெய்வம் விரும்பிய காலமிதோ

நள்ளிரவில் ஒருசூரியனும் - தோன்றி
நட்ட நடுவானில் நிற்கக் கண்டேன்
எள்ளி நகையிட்டு ஏறியெரு - தினில்
ஏழை உயிர் கொள்ளும் காலன் கண்டேன்
பள்ளியில் கள்ளம் பயிலக் கண்டேன் - ஒரு
பாதையில் முட்களைத் தூவக்கண்டேன்
கள்ளிச் செடி முற்றம் முற்றும்கண்டேன் - ஒரு
காகம் வெள்ளையில் கரையக் கண்டேன்

துள்ளிக் கோவில் வலம், சுற்றுகையில் - ஒரு
தேளும் அரவம் துரத்தக் கண்டேன்
புள்ளியிட்ட வாசல்கோலத்திலே - யின்று
பேயின் முகமொன்று  தோன்றக் கண்டேன்
அள்ளியிட நீரில் ஆயிரமாய்ப் -  புழு
அங்கு மிங்குமென ஓடக்கண்டேன்
சுள்ளிவிறகு பொறுக்கியொரு - வனும்
தீமூட்டி உள்ளே படுக்கக் கண்டேன்

பொன்னி லங்கவில்லைப் பூக்கவில்லை - மனம்
போன இடத்திற்சந் தோசமில்லை
மின்னவில்லை மழை மேகமில்லை - எங்கும்
மெல்ல முளைத்திடும் புல்லுமில்லை
அன்ன முண்ண மனம் கூடவில்ல - அந்த
ஆவின் நறும்பாலும் நஞ்சின் சுவை
என்னே! பிரிந்தனை எங்குசென்றீர் - அம்மா
எப்படிமறந்து வாழுவமோ

காற்றில்வாச மில்லைப் பூக்களில்லை அங்கு
கட்டவிழ்க்கும் இதழ் ஊறவில்லை
தூற்றப் பெரு நெல்லு மூட்டையிலே கொள்ளத்
தோன்றிப் புயலிட்டு ஆற்று நிலை
வேற்றுமை கொண்டில்லம் வீதிவந்து உள்ளே
நாட்டில் நுழைந்தது மிச்சமில்லை
பேற்றென அன்னையும் பேசிமகிழ்ந்திட்ட
பெண்ணின் வாழ்வுமெங்கே, ஏங்குமன்னை!!!

*****************

சிறு பெண்ணே


சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே
சிரிக்கும் மலரம்மா
அன்னை தந்த அழகிய கண்ணே
அன்பின் பரிசம்மா
பொன்போல் கன்னம் பூவிதழ்முல்லை
பொருந்தும் வகையம்மா
புன்னகை யென்றும் புதிதாம் உதயம்
பொழுதும் நினையம்மா

அன்பை என்றும் அகமுள் கொள்வாய்
அதுவுன் பலமாகும்
இன்பம் எங்கே உள்ளது வாழ்வின்
எளிமைத் தனமாகும்
தென்பைக் கொள்ளு தினமும்வாழ்வு
தேனில் இனிதாகும்
தன்னல மெண்ணி தன்னலம் விட்டால்
தகமை உயர்ந்தோங்கும்

கல்விநற் செல்வம் காசொடு பொருளும்
காண்பது பின்னாகும்
வல்வினை யாற்று வளமொடுவாழ
வகுத்திடு விதிதானும்
தொல் திருநாட்டின் சுகமெழு வாழ்வும்
திரும்பிடத் தான்வேண்டும்
அல்லது தீர்ந்தே அறமெழுந் தாட
அடுத்து எதுவாகும்

சிங்கமும் புலிகள் வாழ்வது இன்று
சேர்ந்தோர் வனமல்ல
செங்கணை தீயின் அம்புகள்யாவும்
சிரம்மேல் எரிதூவும்
பொங்கிட வழியும் பாலென் றுள்ளம்
புதிதோர் நிலை காண
நங்கையின் உறவே நாடுன தானால்
நலமே  வாழ்வெய்தும்

தென்னவர் பக்கம் தித்திப்புண்டோ
சிறுமைக் கரமேந்தி
என்னவர் நாட்டில் ஏழ்மைப் பஞ்சம்
இயல்பென் றுருவாக்கி
பொன்னெழில் காணப் புரளும்மதியை
பெரிதோர் வரமென்றே
தன்னினம் தாழத் தனிவழிகாண்போர்
தமிழுக்குரி யோரில்

வெண்ணெய் மலரே விடிவுக ளென்றும்
வெளிச்சம் தனைத்தாரும்
விண்ணிடை காற்றில் விரியும்சுதந்திர
வேட்கை மனம்காணும்
கண்ணிடை போற்றும் கருமணிபோலுன்
கடமைகள் தனையாக்கு
பெண்ணவளே நீ பெரிதோர்சக்தி
புரிவாய் பலம் கொண்டே!

**********************

நானும் ஞானிதான்


வாழ்வினில் ஆயிரம் வந்ததைக் கண்டவன்
வாட்டம் எனக்கில்லை ஞானப்பெண்ணே
தாழ்விலும் ஏற்றமும் தன்னில் திளைத்தவன்
தாங்கும் உரமுண்டு ஞானப்பெண்ணே
மூழ்கி எழுந்தவன் மூச்சுப் பிடித்துமே
முற்றும் கடந்தவன் ஞானப்பெண்ணே
வீழ்வில்லை இன்னுமும் வீறுகொண்டே பாரில்
வெல்லத் திடமுண்டு ஞானப்பெண்ணே!

யாவும் உணர்ந்தவன் ஞாலம் அறிந்தவன்
நானே ஓர் ஞானியாம் ஞானப்பெண்ணே
தாவும் இளம்தென்றல் தன்னில் புயலையும்
தாங்குமிடி கண்டான் ஞானப்பெண்ணே
ஏவும் இயற்கையின் ஓடுமுகில் வந்து
என்ன மறைக்கினும் ஞானப்பெண்ணே
மேவும் முகில் உள்ளே மெல்ல ஒளிர்நிலா
மீண்டும் வெளிவரும் ஞானப் பெண்ணே

கொட்டும் மழைவரும் கூவி இடித்திடும்
சட்டச்சட பெரும் சத்தமெல்லாம்
விட்டுவிடும் ஒருவேளை அமைதியின்
வேகம் பிறந்திடும் ஞானப்பெண்ணே
வட்டமுகம்வாடி வாழ்வது விட்டுநீ
வண்ணம் எடுத்தெழில் சோலையிலே
சிட்டுகுருவியென் றோடிப் பறந்திடு
சிந்தை அமைதிகொள் ஞானப் பெண்ணே!

வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை

என்றுமே வாழ்வில் நிலைப்பதில்லை இருள்
ஓடும் ஒளிவரும் ஞானப்பெண்னே
நன்றும் பெருந்தீமை நல்லதும் கெட்டதும்
நாளும் தினம்மாறும் ஞானப்பெண்ணே
குன்றும் குழிகளும் கோடி உண்டு இது
கொண்டது வாழ்வடி ஞானப் பெண்ணே
வென்று புகழொடு வாழ நினைத்திடு!
வெய்யவனாய் ஒளிர் ஞானப்பெண்ணே

மனம் காணும் துயர் மாற்று!

நிலவுகாயுது தனிமையிலே -அந்த
   நீலவிண் ணோரத்திலே
நெஞ்சம் காய்ந்திடவோ மகளே -அந்த
  நிலவினைப் போலவுமே
உலவுதென்றலும் காயம்வர- என்றும்
   உரசியும் வீசுவதோ
உள்ளம் காயமென்றான தெனில் -அதன் 
    உணர்வுக்கு தீயெதுவோ?

கனவு பலவிதம் காண்பதெல்லாம் -அது
   கற்பனையாம் மனமே
கவலை வாழ்வினில் நிலைப்பதில்லை -அது
  காற்றென ஓடிடுமே
மனமும் வானத்தில் பறந்துவிடும் -ஒரு
   மாபெரும் வேகத்திலே
மாறிவருவது துன்பமென்றால் -அதை
   மறந்திடு விரைவினிலே

தீயில் கைகளை வைக்கமுன்பு -அதை
     தெரிந்திடு பொன்மகளே
தீய்ந்ததாயினில் யார்தவறு -அந்த
      தீயது வெறும் சடமே
கோயில் புஷ்பங்கள் நீமகளே -அந்த
     குலதெய்வம் கால்களிலே
கூடியிருந்திட நீபிறந்தாய் -இது
      குடிசையின் வெறுந் தரையே

காய்ந்த மலர்பின்னர் மலர்வதில்லை -மனம்
   காயினும் சாவதில்லை
காணும் காட்சிகள் மாற்றிவிடும் -புது
   கனவெழும் களித்திடுமே
தேய்ந்த நிலவது வளர்வதுண்டு -அந்த
      திங்களும் முழுமைகொளும்
தேனில் இனிய நல்லொளிபரவ -அது
     தினம்தினம் உலவிடுமே!

சேர்ந்த உறவுகளோடுதினம் -நீ
   சிரித்திடு பழகிவிடு
சிந்தை பழகட்டும் தாமரையின் -இலை
     சிந்திடும் நீருறவு
நேர்ந்த நினவுகள் பள்ளியிலே -எந்த
     நாளுமே சொல்வதில்லை
நீயே கற்றிடவேணுமடா -இந்த
     நிஜமெனும் வாழ்க்கையதே!

வானத்தொலைவிலே நீயிருந்தா- லென்ன?
     வண்ணஒளிவருதே
கான நெடுமரக் கூடலிலே -நான்
    காணும் பெரி தொளியே
நானுமிருப்பது காட்டுக்குளே -எனை
      நாடி விலங்குகளே
ஊனைவிரும்பியே சூழ்கையிலே -உனைக்
    காணவும் முடியலையே

இசை மீட்டல்

கலைப் பூக்கள் புவிமீது மலர்கின்றதோ
கனிவான இசைநாதம் எழுகின்றதோ
இலையேதும் இதைவெல்ல எனுமோசையோ
இளநெஞ்சம் புகழ் பூக்க ஒளியாகுதோ
அலையாக எழுந்தாடும் உணர்வானதோ
அறியாத  இறையன்பு வரம் காணுதோ
விலையற்ற வெகு தொன்மைத் தமிழ்வாழுமோ
விளைகின்ற அருஞ்செல்வம் மிகையாகுமோ

வலை கொண்ட  கயல் ஏங்கும் உணர்வானதோ 
வடிவத்தின் புலமைக்கு மனமேங்குதோ
தலைகொண்ட எண்ணத்தின் விளைவாகவே
தருமத்தின் நிறைவாழ்வு தனை மாற்றுமே
குலை போன்று பழம் இங்கு குவிந்தாலுமே
குரங்கான ததன் கையின்  மலர்மாலைபோல்
நிலைஎன்ப தடுமாற்றம் நிகழாமலே - வாழும்
நேர்கொண்ட கலைவாழ நெறிகொள்ளுவோம்

கலைதேரும் உளம்கொள்ளும் பெருமாற்றலில்
கரம் மீட்டும் பெரும் ஞானச் சுவை யூற்றெழும்
சிலைதன்னும் எழுந்தாடும்  சிறப்போங்கிடும்
சிறு கைகள் எனும் பூக்கள் இதழ் தேனிடும்
வலைபாய்ந்து பெரிதாகி நதி ஓடவும் - பாயும்
உயர் கொண்ட நிலைவீழ்ந்து கடல்சேரவும்
மலை மீதுஎழும் காற்றின் சுகமாகவும்
மனம் கொண்ட நிலையான துடன் மாறட்டும்

தொலைவானில் தெரிகின்ற கதிரோங்கவே
தொடும் வாசல் நிறையின்ப ஒளிச்சேரலாய்
புலைகாணும் பெருஞ்சோர்வும் பிறிதாகட்டும்
புதிதாகும் ஒளித்தூண்டல் பெரிதாகட்டும்
தலை காலும் தெரியாமல் தடுமாறிடும்
தவிக்கின்ற இருள் ஓடி ஒளி மேவட்டும்
இலைகொண்ட செழுமைக்கு இணையாகட்டும்
இன்பத்தின் மலர்காடென் றெழில் தேடட்டும்

அழகான இசைக் காடு மரவங்களாய்
அவரூதும் இசைகேட்டு மனமாடட்டும்
எழவீழ அதுவாக்கும் இரைகூச்சலும்
உயர் ‘வான ஓங்கார’  இசையேற்றமும்
முழமென்ப வளர்தெங்கும் மிகுந்தானதே
மெருகேறும் இசைபொங்கி  மெல நீளடட்டும்
அழ வந்துசொரிகின்ற விழிநீர் மட்டும்
ஆனந்தம்தரு தென்ற விதியாகட்டும்!

Wednesday 25 November 2015

தகவல்

இங்கே சேர்த்த கவிதைகளை மீண்டும் சேர்த்துள்ளேன் போலிருக்கிறது.. சரிபார்த்து நீக்கப்படும்
கிரிகாசன்

சக்தி கொடு 2





விண்ணெழுந்த புள்ளினங்கள்
. வானில் நின்று தேடும்
வீறெழுந்து மேனிசுட்ட 
. வெய்யில் மீண்டும் தோன்றும்
மண்பிறந்த மென்மலர்கள்
. மஞ்சள்செம்மை வண்ணம்
மாற்றமென் றிதழ் பிரிந்தும்
. மாலை யொன்றில் கூடும்
தண்ணலைகள் நிம்மதியைத்
. தேடியோடி மாளும்
தாங்கிடும் நீர் தாமரைக்குத்
. தந்தனத்தோம் போடும்
எண்ணவே இனிக்கு மாங்
. குயில் படித்தகீதம்
இத்தனை எழில்படைத்தாள்
. அன்னை சக்திதானும்
வெண்ணொளிக் கதிர்சிறந்து
. வானமேறக் காணும்
வீழ்ந்த சின்னத் தூறலை
. விரும்பித் தோகை ஆடும்
விண்வளை விதானத்தோடு
. வில்லின் ஏழுவண்ணம்
விந்தை காண் உன்வாழ்வு மெந்தன்
. விம்பம்கொண்டதென்கும்
பெண் குழைந்து பேச நெஞ்சம்
. பூவில் வண்டென் றாகும்.
பேதை உள்ளம் போதைக் கள்ளை
. பார்வைமொண்டு வார்க்கும்
அண்மைகண்டு திண்மைகெட்டு
. ஆணின் நெஞ்சம்வேர்க்கும்
அச்சம் விட்டு பெண்மை கிட்ட
. ஆனந்த வாழ்வேங்கும்
கண்ணில்காணும் காட்சிகொண்ட
. காலம்செய்யும் மாயம்
காதலின் இயற்கையின்பக்
. காட்சியை யும் மாற்றும்
எண்ணம்மீது வேட்கைபற்றி
. இச்சை கொண்டு பாயும்
இல்லை யென்றபோது துன்பம்
. ஏணி வைத்தேஏறும்
தண்ணலைத் தடாகத் தூடு
. தாக்கும் கற்கள் வீழும்
தன்னைமீறி நீரெழுந்து
. தன்மை கெட்டேமூடும்
புண்ணெழுந்த தாக நெஞ்சம்
. புன்மை கொண்டுவாடும்
புத்துணர்வுகொள்ளச் சக்தி
. அன்னைவேண்டு நாளும்
***********************

வாராய் பெண்ணே!



காலத்தின் கோட்டையில் கட்டியதாய் ஒரு 
காணெழில் கோபுரம் நீயோ - அந்த
.நீலத்திரை வண்ண மேடையிலே வானில் 
நிற்கும் எழில் மதியாமோ
கோலத்தில் வெண்பளிங்கொன்றில் செதுக்கிய
கூருளி செய் சிலை தானோ அந்த
நாலதிலே கொண்ட நாணமோ கொள் முகம்
நன்கு சிவந்திடப் போமோ.

வேலதையே விழி கொண்டெறிய அதில்
வேதனை கொள்பவன் நானோ - நடுப்
பாலத்திலே வழிபக்கம் தெரியாது 
பார்த்து கலங்கிடுவேனோ
மூலத்திலே பகை கொண்டதல்ல எனை
முற்றும் வெறுப்பவள் நீயோ - அதி
தூலமெனும் நினைவானதிலே கூடித்
தோளில் மாலையி டுவாயோ 

சாரத்திலே  உள்ளே அன்புவைத்தேன் அதைத்
தட்டிப் பறிப்பவர் யாரோ - ஒரு
ஓரத்திலே விதி  என்னை  விட்டு உந்தன் 
எண்ணத்தில் வேறிடுமாமோ
ஆரத்திலே கோர்த்தே ஆடும் மணிகளை 
அன்ன அணைந்திட லாமோ - இந்த
நேரத்திலே  என்னை நீமறந்தே  எந்தன்
நெஞ்சை விட்டே  அகல்வாயோ

வீரத்திலே  இவன் வேல் முருகின் வரம் 
வேண்டி அடைந்தவன் பாராய் -அடி
வேரதிலே மரம் விண்ணுயரும் அதன்
விந்தைநிலை யாவேன் கேளாய்
ஊரதிலே உன்னை வாழ்த்திடவே வைப்பேன்
உண்மை நம்பி கரம் தாராய் - இந்தப்
பாரதிலே மலர்ந்தாடும் இளம்பனிப்
பூவின் மென்னுள்ளமே சேராய்

காலம் வராதோ?

பொட்டுவைத்தாள் தீஎழவும்  
.  புன்னகைத்தே சுட்டுவிடப்
பட்டெரியும் வீறுடனோர் 
.   பாங்கு மமைத்தாள்
ஒட்டவைத்தாள் ஓருயிரை 
.  உள்மனதில் அன்பை இட்டாள்
கட்டி வைத்தால் காலிரண்டை
.  காதல் என்றிட்டாள் 
.  
தொட்டுவிட்டால் தோலுணர்வில் 
.   சொர்க்கம் என்றே இன்பமிட்டாள்
தோளில் ஒரு மாலை யானை 
.   போடவும் வைத்தாள்
கட்டில் அர சேறவைத்தாள் 
.  கற்பனையில்  மோகமிட்டே 
காற்றுடனே பார்த்திருக்கக் 
.  கரைந்திடச் செய்தாள்

மொட்டு இதழை கட்டவிழ்த்தாள் 
.  முன்மதுவை இட்டுவைத்தாள்
மெட்டிசைக்கும் வண்டினத்தை 
. தொட்டுண்ண விட்டாள்
திட்டமிட்டாள் தேடி வந்தே 
.  தேவைஎனும் போதினிலே
தட்டுமிட்டாள் தட்டில்பணி 
.  தக்கது மிட்டாள்

மட்டுமட்டாய் வாழ்வினிலே 
.  மாறி அந்தம் ஆகையிலே
கொட்டிவைத்தாள் சக்தி எனும்
.  கொள்கையைக் கூட்டி
விட்டமதைக் கூடச் செய்தாள்  
.  விரிவானின் எல்லையின்றி
வட்டமென வான் வளையும் 
.  அற்புதம் செய்தாள்

கெட்டுவிடச் செய்வதென்ன 
  கீழ்குடிகள் காவல்கொள்வோம்
கட்டவிழ்த்துக் கண்துலங்கச் 
,    காணவை என்றால்
முட்டவிழி மலர வைத்தாள் 
..   முன்னிருந்து ஆக்குவித்தாள்
மூவுலகும் தோற்றமெழக் 
    முன்னி றுத்தினாள்

வட்டமெனச் சுற்றுமந்த 
.   வான்வெளியின்கோளங்களை
விட்ட வழிசென்றெழிலைக் 
  .  விழி கொள்ளுவேனோ
அட்ட திக்கும் சென்றவளின் 
.     ஆற்றலுடன் நானிணைந்து
ஆன இருள் தான் விரட்டும் 
.    காலம் வராதோ

வேண்டுதல்

தன்தாளே நான்வணங்கத் தந்தவளே கூறண்டம்
சென்றாழம் காண்பேனோ சுற்றும் பூவியுருண்டு
நின்தாளம் கொண்டசைய நீலக்கரு வானத்
தின்பால்கொள் சூரியன்கள் போல்நானும் ஒளிரேனோ
சிந்தை களித்திடச் செய்கவிகள் தேன்போலும்
சந்தம் கிளர்ந்தெழவும் சாற்றுவையோ நான்கேட்டு
உந்தன் குரல்மொழியாய் உருவாக்கி இங்களிக்க
செந்தமிழ்க் கவிகேட்போர் சிந்தை யுனில் திரும்பாதோ
வந்தால் ஒளி பெருகும் வையகத்தில் இருளகலும்
எந்தாழம் ஆனாலும் இதயத்துள் ஓளிசிறக்கும்
வெந்தால் எரியுமுடல் விட்டோடும் மனவிளக்கு
பந்தால் சுவரெறிந்த பாடு உன்னில் திரும்பிடுமோ
கந்தை உடைபூண்டு கடும்பிணியில் உழன்றவனை
அந்தோ அருணகிரி ஆக்கி விட மாட்டாயோ
விந்தை நோய் எனைவிட்டு வெளியேறக் காண்கிறேன்
சிந்தால்கவி படிக்கச் சொல்லெடுத்துத் தாராயோ

விதியின் விளையாட்டு



விதிநீயே விளையாடும்போது 
 வேண்டுவதென் நாம் மனிதம்தானா 
எதிலேயும் துன்பங்கள்தானா 
  இல்லை யுனக்கிரக்க குணம் ஏனோ
குதித்தாடி நீசெய்யும் மாயம் 
  குருடாக்கி எமை வீழ்த்தலென்ன
சதிசெய்யும் கலைபடித்த வல்லோன்  
  சகுனிக்கோ பாடம் சொன்ன ஆசான்

நதிஓடும் நடந்தாலும் சேரும் 
  நான்கு திசை கண்டும் கடல் கூடும்
புதிதாகப் பூத்த மலர் வண்டு 
  போதை கொளும் தேனை உண்ட பின்பு
பதியோடு சதிசேரும் வாழ்வும் 
  பனிபூத்த புல் வெளியின் காற்றும்
இதிலேயும் அதிலேயும் எங்கும் 
  இட்ட  மகிழ் வேன் எமக்குத் துன்பம்

விதியென்று கட்டளை யிட்டாரோ 
   விந்தையுன்னில் எண்ண்மிட்டதாரோ
மதிதன்னை மயக்குவதில் மன்னன் 
   மாயவித்தை மகுடிஊதும் குள்ளன்
பொதியாக நாம்சுமக்கும் கூடு 
   போட்டுடைக்க செய்யும்வழிபார்த்து
அதிலேயும் ஆணவத்தைக் கொண்டு 
   அள்ளுமுடல்  செய்வலிகள் தந்தே

கொதிக்கின்ற உள்ளமதை கொண்டோம் 
  கூடிச் செய்யும் வஞ்சனைக்குள் நில்லோம்
அதிகமென்று கொண்டதென்ன துன்பம் 
  அல்லலுற்று வேதனை கொள் இல்லம்
முதிர்வயலில் முற்றும் கதிர்வளையும் 
  முத்தமிழைப் பேசுமினம் நிமிரும்
சதி செய்துவாழ்வளிக்க முன்னே 
  சற்றுப் பொறு சதிமதியால் வெல்வோம்

செய்தவள் அவளே!

திக்கெட்டும் சேதிகள் தேடிதிரி இன்னும் 
தேரெனச் செய்தவள் அன்னை
சிக்கட்டும் உள்மனம் தீயினிலே எனச்
சேர்த்திடவோ வெறும் பொன்னை 
தக்கதக என்றே மின்னிடச் செய்யவும்
தந்தவளோ தீயில் என்னை
தக்கத் தக தக தக்கன காணவோ 
தந்ததுமென் என்னுள் என்னை?

இக்கதியே னதை  இன்னும் புரிந்திலேன்
இக்கணம் மட்டிலும் இல்லை
பக்கத்திலே அவள்பட்டு ஓளிர்ந்திடப்
பார்த்தவன் என்செய்ய கண்ணை
முக்கனம் கேட்டவன் மூக்கில் விரலிட
முன்னேவிட்டால் இனி யென்னை
எக்குறைவுமற்று காத்திடுவாள் என்றே
எண்ணினேன் தாஅருள்தன்னை

அற்புதமே அன்னை யாக்கைஅளித்தவள்
ஆக்கலழித்திட முன்னை
பற்றுதலால் எனைப் பற்றிநின்றாள் வெகு
பக்குவமாக வேதனை
சுற்றிநின்ற துயர் போகிடச்செய்துமே
சுத்தமென் றாக்கிட என்னை 
இற்றைய நாள் ஒளி யீந்தனளோ இனி
என்வழி செல்லடிசொல்லாய்

நித்தியமே சக்தி நிச்சயமே ஒளி
நீளவிண்ணின் ஆதிமுன்னை
சத்திய காரூண்ணிய சித்தி விளைப்பவள்
செய்யென சொல்வதும் உண்மை
புத்தியிலே கடும் போதனை செய்வளோ
பார்த்திருந்தேன் இனி என்னை
எத்திசையில் வழிகாட்டுவளோ அதை
எண்ணிக் கிடக்கிறேன் அன்னை!

******************************

இப்போது இல்லை, பின் எதற்கு?

தேகம் கறுத்துக் கிடந்ததென்ன - அந்தத்
திங்கள் ஒளியை இழந்ததென
ஆகப்பெ ருத்தும் அவ் வாழியுயர் - திரை
யாகி எழுந்தும்பின் வீழ்வதென்ன
போகம் உடம்பினைத் தின்பதென்ன  அது
போதுமெனும்வரை கொண்டதென்ன
தாகம்  எடுதத இம் மேனியிலே பேயும்
தாவிப் பிடித்தாடிக் கண்டதென்ன

காகம் குயில் கறுத் தேயிருந்தும் அந்தக்
காகம் குயிலிசை பாடிடுமா
நாகம் நளினம் கொண்டே யசையும் - அதை
நாமும் ரசித்துற வாடிடவா
வேகமெடுத்த இவ்வாழ் வினிலே - விடை
வேண்டித் திரிந்துள்ளம் காண்பதில்லை
யாகம்முடித்து வான் வீதியிலே எங்கள்
யாத்திரை யின்பின்னர் கண்டுமென்ன

சோகம் மனதினைக் கவ்வுவதும் அது
சேர்ந்து வரும் வாழ்க்கைப் பாதையெங்கும்
பாகமெனப் பங்கு கொண்டபழி - செயல்
பண்ணும் மனதினை வென்றுவிடும்
ஏகம் அனேகமென்றான ஒளி- அந்த
ஏற்ற மிழந்துபின் வாடுகையில்
பூகம்பமாய் உ:ள்ளும் மேலிருந்தும் எங்கள்
பேணி வளர்த்தமெய் தீய்த்துவிடும்

மேகம் பொழிந்திட நீர் வழியும்  இந்த
மேனிமலர் சுகபோதை யெழும் பி0ர
வாகம் என புரண்டே மகிழும் - -முடி
வாக உணர்வுகள் தானடங்கும்
ஆகும் தனிமைகொண் டாணவமும் அது\
ஆட்டிவதைதிட்ட  மேனிதனும்
தீ‘கும்’மென்றோடித் எரித்தபின்னர் மனம்
தேடும் அமைதி கிடைத்துமென்ன !!

தீவிழி வேண்டும்


சங்கரனின் கண் வேண்டும்
.  சற்றே இப்புவிதன்னில்
    சாம்பல் ஆக்க
பொங்கி மன வெறி கொண்ட
.   புல்லோரின் தீயமனம்
.   பொசுக்க வேண்டும்
அங்கமெலாம் நஞ்சாகி
.  அகம் வந்தே இனம் கொன்றும்
.  அடிமையாக்கி
எங்குமவர் கொடி பறக்கும்
   இச்சைகொள்வோர் கண்டுவிழி
.   இமைக்க வேண்டும்

மங்கை தமிழ்ப் பெண்ணவரை
.    மணமேடை இல்லாது
.    மஞ்சம் கொண்டே
செங்குருதி முகம் கொழிக்கச்
.    சினம் மேவும் நிலைகண்டு
.    சிவந்தே அழுதோர்
அங்கம்படச் சேறிட்டும்
.    அவர்பெண்மை இழிந்தூற்றி
.     அவலம் செய்தோர்
எங்குளரோ அங்கவர்முன்
.     என்விழியும் திறந்தனலை
.     இறைக்க வேண்டும்

வந்துபிறந் தோம்வாழ்வில்
.    வகையறியாத் தவழ்ந்தோடி
.    வீழ்ந்தே எழுந்தோம்
அந்தோ எம்அன்னைகரம்
   அணைக்க மனம் மகிழ்ந்தேநல்
.   அன்பைக் கண்டு
விந்தை யுலகென்றோடி
.   வியந்தே அறிந்த நம்
.   வாழ்வை யின்றோ
இந்தவகை தீயவரும்
.    எடுக்க அவர்மீதுகனல்
.    எறிய வேண்டும்
 
வஞ்சகமாய் வந்து தமிழ்
.   வரலாற்றைத்  திரித்தெழுத
.   வழியும் கோலி
கொஞ்சி மகிழ்ந்தே குலத்தை
.    கொடியறுக்கும் விதமாகக்
.    கெடுக்க வெண்ணி
நஞ்செடுத்தே அமுதமதில்
.    நடுவூற்றிக் கலப்தென
.    நல்லோர் தூங்க
தஞ்சமென்று இருந்தோரைத்
.    தான்கருக வைத்தோரும்
.    தகிக்க வேண்டும்

சிம்மாசனம் ஆட்சி
.    செங்கோலும் திறைசேரி
.    செம்மை வாழ்வு
அம் மாபெரும் படைகள்
.    அலங்காரம் அந்தபுரம்
.    ஆடும் நங்கை
செம்மாதுளை பிளந்த
.     சிரிப்போ நகைசிந்தும்
.     சிறுவர் கூட்டம்
இம்மா சுகம் கொண்டே  
.      இருந்த இனம்அழித்தோர் கண்
..     டிமைக்க வேண்டும்

துஞ்சும் நெஞ்சம்

அன்புடை நெஞ்சங்கள் ஆவி துடித்திட
  ஆக்குவன்  பேரென்னவோ  - பகை
வooன்புய லாய்வந்தே உள்ள உயிர் கொல்லும்
     வாடிக்கை தான் திறையோ
தென்புலம் வந்துபொன் தேடிக் கொள்ளை யிட்டுத்
   தேவைகள் தீர்த்திடவோ  - அவர்
தென்புறத் தேனடை தீந் தமிழ் காவியத்
     தென்றலாகித் தொடவோ

எண்புலி என்னிலென் ஏகாந்த சூழலில்
  எண்ணக் கிடைப்பதென்ன  - அவர்
கண்புகை பட்டு கலங்கலின்றி உடல்
  காணும் வதைக்கென்னவோ
பண்புள்ளம் கொண்டு பழகும் தமிழ்மகன்
  பார்வைகே மாளி யென்றோ - காணும்
புண்படும் உள்ளத்தில் கொண்ட புயல்தன்னும்
  பூமியில் பொங்கிடுமோ

செண்பகம் ஒன்று சிறுமரத்தில் நின்று
  சேதியும் கூறியதே - இந்த
மண்பகை வன்கொள்ள மாடுகளாய் உழும்
   மானிடம் ஆகுமென்றே
தண்புனல் தன்னும் தருணமென்றால் ஊருட்
  தாவிப் பலி எடுக்கும் - பகை
பெண்புதுமைத் தமிழ் பேரழகு சிதைத்
   தின்புற ஏன்கிடந்தோம்

கட்டி விறகிட்டு தீயெரித்தால் உடல்
  கையளவே கிடைக்கும் - அதை
வெட்டி உதிரத்தை வேருக் கிறைத்திட
  வீரப் பயிர் முளைக்கும்
தட்டிப் பறித்தவர் தம்மைவிட்டு மண்ணை
    எட்டிப் பிடித் திழுக்கும் - செயல்
திட்ட முடன் தெளிவோங்கிடச் செய்திடத்
   தேவை தலைமையொன்றும்

வட்டமுரசறைந் துற்ற வெற்றிதனை
    எப்போவிண் ணும் ஒலிக்கும் - நின்று
கொட்டும், தாளமெழக் கட்டழகுப் பெண்கள்
   சுற்றிக் கோல் கொண்டடித்தும்
சட்ட மெழுதித்தன் எல்லையிலே கொடி
   சட்சட் பட்டென் றடிக்கும் -  நிலை
கொட்ட மடித்தின்பக்  கும்மாளம் போட்டிடும்
    கோலங்கள் காண்பதெப்போ

===================

மனம் செல்லும் தனி வழி


பனிவிழும் மலை தனும் சுடுமா - நடுப்
பகலவனொளி குளிர்ந்திடுமா
கனி கொண்ட சோலையின் முதிர்மா - தரும்
கனிந்திடும் பழம் கசந்திடுமா
இனி மனம் இனித்திடத் தருமா - நல்
இயற்கையின் ஊற்றெழும் விதமா
மனிதமும் திளைத்திட வருமா - என்
மன திறைமகள் தரும் தமிழ்ப்பா

மனமது  தனி வழிசெல்லும் - அது
மயங்கிடும் மதியொளி கண்டும்
தனதெனும் வழியொன்று கொள்ளும் - ஒளி
தவிர்ந்தொரு இருள்வழி கண்டும்
மனம்கெட இருவிழி அஞ்சும் - அதை
மதிப்பதில்லை எண்ணம் மிஞ்சும்
இனமதில் குரங்கதன் சொந்தம் - அது
இடர் கொள்ள உயிரது துஞ்சும்

தனமது தேடி நெஞ்சேங்கும் - அது
தவறெனும் வழி யென்று கண்டும்
எனதென உரிமையும் கொள்ளும் -அதை
எதிர்பவர் பகைஎனத் துள்ளும்
கனவுகள் பலபல காணும் - அக்
கனவதன் நிலைகொள ஏங்கும்
புனிதமென் றெதனையும் அள்ளும் - அவை
பிறிதெனக் கண்டுபின் வெம்பும்

சினமது நிலைதனை வெல்லும் - அதில்
சிரிப்பிபெனும் உணர்வினைக் கொல்லும்
வனமுள்ள மாவிலங்கென்னும் - கொடும்
வகையுடன் கொடுமைகள் செய்யும்
சுனைதனில் எழில் மலர்க் கமலம் - அது
சுழல்விரி அலை தள்ளும் அவலம்
எனை யொரு தருணமும் தள்ளும் - பின்
இள வளர்மதி நிலை கொள்ளும்

விழுந்தனன் வேறில்லை வழியில் - மனம்
வலித்திட கிடப்பவன் கதியில் \
எழுந்தவை இடர்தரும் எண்ணம்,- அது
இங்கில்லை எனதரும் உள்ளம்
வழுந்திய பெருவினை கொண்டும் - என்
வாழ்வினில் பொழிந்த கண்,மழையும்,
அழுந்திட பிறந்ததும் ஆகும் - அதை
அதி பெருந் தீ புடம் போடும்

--------------------

அழகோ நிறைவோ


பொழிமழை பெருகிடும் பொழுதினில் மலைதனில்
பிறந்திடும் அருவிகள் அழகோ
வழிநெடு கிலும்விளை கதிர்களும் பசுமைகொள்
வயலிடை உலவிடல் அழகோ
விழிமொழி பகிர்ந்திடும் விதங்களும்இளமையின்
வளம் மலரிதழ் எனும் அழகோ
மொழிதமி ழினிதென முதன்மையி லிருவென
முனைந்திடப் பெறும்நிலை அழகோ

விளைகடல் திரவியம்.விரவிய அலையிடை
விழுந்தவர் பெறும் குவை மகிழ்வோ
முளைவரும் பயிர்களில் தளிர்வரும் தொடுமதை
மலர் மணம் தருந் தென்றல் மகிழ்வோ
வளைபுகு சிறுநண்டு வலம்வருங் கரையினில்
வனிதையர் எழில்நடை விதமோ
களையெனத் தமிழ்மறந் தெதிரிடை புகுஞ் சிலர்
கருத்திசைந் திடும்கணம் மகிழ்வோ

இனிகனி யெனும்சுவை இருந்திடு மமுதெனில்
எடுத்துண்ணு மவர்பசி விடுமோ
தனிமையில் துயரினைக் கொளும்மகன் சதியென
பெறவுடல் பெரும்பசி விடுமோ
முனிவரும் துறவறம் தனிலிறை வரம்பெற
முனைவதில் அவர்பசி விடுமோ
இனியெம தமிழ்கொளும் இழப்பிலைச் சுதந்திரம்
இதுவெனும் வரைபசி விடுமோ

மழலையின் குரலினை  மகிழ்வொடு விரும்புவர்
மடியினில் கனம்கொள நிறைவோ
தழலெனும் பெரும்பிணி சுடுமுடல் கருகிடத்
தணிக்குமௌ டதம்தரும் நிறைவோ
குழலெனும் இனிமைகொள் குரல்தரு இசைநயம்
குலவிட மனம்பெறும் நிறைவோ
பழமைகொள் புகழ்தமிழ் பகைவிடுத்தொரு நிலம்
பகிர்ந்திடும் நிறைவொன்று வருமோ


..........................

சக்தி கொடு

 சக்தி கொடு சஞ்சலந் தீர் சற்குணவி ருத்தியொடு
புத்திகொடு புன்னகைத்தே பூவுலகில் வாழ்வமைக்க
உத்திகொடு உண்மைகொடு உத்தரிக்கும் வாழ்வினிலி
ருத்தியெனை வாழ்விழக்கும்  இன்னல் பெறச்செய்யாதே

ரத்தினமாய் மேனிசிவந்தொற்றிய வெண்மேகமதுள்
புத்தொளியும் கொண்டகதிர் போதினில் தன் தலைகாட்ட
சுத்தஓளி வான்பரவிச் சுதந்திரமென்றிசை பாடப்
பித்தெனவே ஆகும்மனம் பேணுமின்பம் பெருகாதோ !       

மெத்தனமோ மேவும்நிலை மேதினியில் வேண்டா நல்                          
    
உத்தமியே உள்ளுணர்வீல்.ஓடும் அலை தூங்காது
வித்தையெனக் கற்றிடும் நம் வீரமொழி இன்னிசைப்பா
எத்தனை யென்றில்லாது நித்தம்மொன்று பூக்கவிடு

சத்தமில்லா வண்டமரத் தேன்மலரும் ஊட்டும்மது
நித்தமுமென் கையெழுத நின்னொளியும் கூட்டிவிடு
கத்தி யெனும் கூர்கொளவும் காலமதில் தீட்டியெடு
அத்திகட்டாக் கவிதைமது  அள்ளியெனை ஈயவிடு

Saturday 17 October 2015

ஆட்கொள்வாள் எம்மை

நீயிருந்தாய் என்னருகே
. நினைவெழுதும் கற்பனைகள்
. நெஞ்சிலிசை கொண்டினிமைகாணவே
தாயிருந்தால் காணும் சுகம்
.  தந்தவள் நீ தந்ததனால்
.  தானுமெழில் கொண்டகவிகூறவே
போயிருந்தால் கோவில்சி.லை
. போட்டுடைக்க மண்கலயம்
. போகமென்னுமாயைகொண்ட தேகமே
வாயிருந்தால் வாழ்ந்திடலாம்
.  வாடி நின்றால் தேய்ந்திடலாம்
.  வாழ்க்கைகொண்ட இந்தநிலை கண்டுமே

சேயழுதால் தாயணைக்கும்
.  சேர்ந்தகொடி மரமணைக்கும்
.  சீறிவரும் மாநதியு,மோடியே
தூய கடல் சேர்ந்திணையும்
.  தூக்கம்விழி கொண்டணையும்
.  துன்பம்வந்து வாழ்வணைக்க முன்னரே
தேயுங் குறைத் திங்களெனத்
.  தோன்றிடாது வாழ்வுதனை
.  தீயவழி மீண்டு நலம்வாழவே
போயணைப்பாய் உள்ளமதில்
.  பூத்த ஒளி பொலியும்வண்ண
.  பேரொளியாம் ஞானசக்தி ரூபமே

கானகத்தில் காணும்மரம்
.  காற்றடிக்க ஊதுமூங்கில்
.  காட்டருவி வீழுமெழில் கூட்டியே
வானகத்தில் வெள்ளிசிரித்
.  தாட அயல் வெண்முகிலில்.
.  வீழ்ந்துறங்கிச் செல்லும் நிலா கூடவே
மீனகத்தில் கொண்ட திரை
.  மேவிஎழுங் காற்றின்சத்தம்
.  மீறி எழும் கடல்தனையும் ஆக்கியே
தானகத்தில் எம்மையெண்ணித்
.  தந்தவுடல் கெட்டுமென்ன
.  தகிக்கவைத்து ஆட்கொள்ளுவாள் எம்மையே

சக்தி என்று சொல்லுவோம்

சக்தி என்று சொல்லுவோம் சரித்திரத்தை வெல்லுவோம்
பக்தி கொண்டும் ஆடியே பரத்தி லின்பங் காணுவோம்
எக்கதிக் கென் றாகினும் இயற்கை தந்த தாயவள்
சக்கரம் கை சுற்றுவாள் சந்ததிக்கென் றாகுவோம்

செக்கிழுத்த மாடென சுழன்றுலாவி வாழ்விலே
சக்கையாகிப் போய்விடா சக்திபெற்று வாழுவோம்
சுக்குநூ றுடைந்திடும்  சுந்தரப் பொன்வெள்ளிகள்
எக்கனல் பொறித்தழல்  ஏகுமந்த வான்வெளி

பக்குவத்தைக் காத்துமே பனிக்குளிர்ந்த சூழலில்
உக்கிரத்தை கொண்டொளி ஒளிர்ந்திடும் வெம்சக்தியை
விக்கினத்தைப் போக்கிடு விரைந்து வா தமிழ்படும்

துக்கமும் துயர்கொள்ளும் துடிப்பினை நிறுத்தியே

மக்களாம் பழங்குடி மாந்தர் கெட் டழிந்திடா
செக்கச்செந் நிறம்பட சிந்தை யேங்கிச் செத்திடா
வக்கணத்தில் சூழ்ந்தெமை விசக் கொடும்பல் பாம்புகள்
எக்களித்துக் கொத்தியே இடர்படுத்தும் பூமியில்

நக்கவும் இனித்திடும் நல்லதேன் சுவைப்பென
மிக்க அன்பு பொங்கிட மேன்மை கொள்ளும் வாழ்வு தா
தொக்கி வான் சுழல்புவி சுதந்திரத்தில் வாழ்ந்திடச்
சிக்கல் தீர்த்துச் சக்தியே, செய்நலமென் றாடுவோம்

பெண்ணின் சக்தி


காலையிலே பரிதிவட்டம் அடிவான்தோன்றக்
கலகலத்தே யாடும் மரக்கிளையின் இலைகள்
ஓலைஇழை தென்னை தருகிடுகால் வேய்ந்த
ஒர்குடிசை யோரத்தில்  நின்றேன் யானும்
சோலைமலர்த் தென்றல் வரும் வாசங்கொண்டே
சுந்தரமாய் நாளொன்றின் செழித்தோர் காலை
மேலைவான் உச்சியினுக் கேறும் நாட்டம்
மெல்ல எழும் சூரியன்கொண் டெங்கும் தாவ

சேலையணி மாதொருத்தி சிறிதாம் குடிசை
சேர அயல் நின்றுவிழி சிந்தக் கண்டேன்
வாலையவள் பருவத்தின் வனப்பைக் கொண்டாள்
வாலிபனோ அவள் கணவன் வீம்பில் நின்று
சாலைதனில் போய்வருவோர் சாட்சிநிற்க
சீராக்கி சிறு பிரம்பினைக் கொண்டவள் சீண்ட
நூலையிடை கொண்டவளோ நெஞ்சம் விம்மி
நிலையிலஞ்சி தலைகுனியும் செயலைக் கண்டேன்

ஆசைகளைச் சுமந்தின்பம் தேடும் வாழ்வில்
அகத்திடையே உருவாக்கும் வேட்கைதானும்
காசைப் பணம்பெரிதென்றே கண்டே நெஞ்சும்
காணதே அன்பென்ப கருத்தில் கொள்ளா
தேசையுடை திலக நுதல் தீட்டும் மங்கை
திருத்தலங்கள்  தெய்வம் எனக் காணும்போதும்
மாசையுடை வாழ்விலந்தப் பெரிதாம் ஒளியை
மனமெண்ணி உருகிவரம் கேட்டல் வேண்டும்

தேசமெங்கள் தூயமண்ணில் தோற்கா பெண்கள்
தினமெடுத்த வாழ்வில் பெரும் திண்மைசக்தி
மோசமற முற்றும்துயர் மறைந்தே போக
முடிவினிலே வெற்றிதனைக் கொள்ளத்தானும்
வீச வருங்காற்றுக்கோர் வலிமை உண்டாம்
வெகுண்டெழவும் புயலாகும் வீரம் உண்டு
நாசமெலாம் அழிந்து பெரு நன்மைகூட
நாளுமவள் சக்தியினை வேண்டிக்கொண்டால்;

பெண்ணவளில் பெருஞ்சக்தி பிணைந்தே காணும்
பேதைகளோ தன்வலிமை தாமேயறியா
மண்ணிடையே மாகரியை ஓட்டும் பாகன்
மனதில் அவன் வலிமைகொண்டான் என்றேயெண்ணி
புண்-படவே அங்குசத்தால் குத்தும்போது
பிளிறி யதன் வேதனையைதாங்கும் யானை
கண்படவே பெண்டிர் தமை கடையில் வைத்துக்
கச்சிதமாய் தன்வலிமை கொண்டே பகன்று

வெண்ணெய் என உருகியவள் துன்பங்கொண்டு
வேண்டும் பலம் என்றெண்ணா விதியைநோகும்
வண்டதனை தாங்குமலர் வண்ணம் கொண்டே
வலிமை குன்றி உள்ளோமென் றன்னையர் எண்ண
உண்டுசெயும்மனித வர்க்க உறவைக் கொண்டாள்
ஒளியவளைச் சக்தியினை வேண்டிக் கொண்டால்
பாண்டுபல காலமெலாம் பணிந்தே நின்றார்
பாடு ஒழிந் தாற்றலதும் பெருக காண்பீர்

Tuesday 13 October 2015

காலம் வராதோ?

பொட்டுவைத்தாள் தீஎழவும் 
. புன்னகைத்தே சுட்டுவிடப்
பட்டெரியும் வீறுடனோர் 
. பாங்கு மமைத்தாள்
ஒட்டவைத்தாள் ஓருயிரை
. உள்மனதில் அன்பை இட்டாள்
கட்டி வைத்தால் காலிரண்டை
. காதல் என்றிட்டாள்
.
தொட்டுவிட்டால் தோலுணர்வில்
. சொர்க்கம் என்றே இன்பமிட்டாள்
தோளில் ஒரு மாலை யானை
. போடவும் வைத்தாள்
கட்டில் அர சேறவைத்தாள்
. கற்பனையில் மோகமிட்டே
காற்றுடனே பார்த்திருக்கக்
. கரைந்திடச் செய்தாள்
மொட்டு இதழை கட்டவிழ்த்தாள்
. முன்மதுவை இட்டுவைத்தாள்
மெட்டிசைக்கும் வண்டினத்தை
. தொட்டுண்ண விட்டாள்
திட்டமிட்டாள் தேடி வந்தே
. தேவைஎனும் போதினிலே
தட்டுமிட்டாள் தட்டில்பணி
. தக்கது மிட்டாள்
மட்டுமட்டாய் வாழ்வினிலே
. மாறி அந்தம் ஆகையிலே
கொட்டிவைத்தாள் சக்தி எனும்
. கொள்கையைக் கூட்டி
விட்டமதைக் கூடச் செய்தாள்
. விரிவானின் எல்லையின்றி
வட்டமென வான் வளையும்
. அற்புதம் செய்தாள்
கெட்டுவிடச் செய்வதென்ன
கீழ்குடிகள் காவல்கொள்வோம்
கட்டவிழ்த்துக் கண்துலங்கச்
, காணவை என்றால்
முட்டவிழி மலர வைத்தாள்
.. முன்னிருந்து ஆக்குவித்தாள்
மூவுலகும் தோற்றமெழக்
முன்னி றுத்தினாள்
வட்டமெனச் சுற்றுமந்த
. வான்வெளியின்கோளங்களை
விட்ட வழிசென்றெழிலைக்
. விழி கொள்ளுவேனோ
அட்ட திக்கும் சென்றவளின்
. ஆற்றலுடன் நானிணைந்து
ஆன இருள் தான் விரட்டும்
. காலம் வராதோ
**************

காப்பாய் தீயே

அச்சமும் கொள்ள வைத்தாய் - தேவி
ஆசை பெருக விட்டாய் - உள்ளே
நிச்சய மற்ற குணம் - கொண்டே
நீரலை பொங்க வைத்தாய் -இன்னும்
உச்ச உணர்வு கொண்டும் - என்னை
ஓடிக் கலங்க வைத்தாய் இன்னும்
மிச்சமுமுண்டோடி - தாயே
மீள அருள்கொடடி
புத்தி கலங்கி நின்றேன் - கூறும்
பேச்சில் அரற்றிக் கொண்டேன் - நின்னை
எத்திசையும் அறியா - நெஞ்சில்
ஏக்கமும் கொண்டலைந்தேன்- வல்ல
சித்திதரும் ஒளியே - என்னைச்
சேர்ந்த வாழ்வோங்க வெனக் - கண்டே
நித்தமுனைத் தொழுவேன் - அன்பை
நெஞ்சில் விருத்தி செய்வாய்
பட்டவை துன்பமெலாம் - இனியும்
பங்கு கொளாதபடி - என்னை
சுட்டபொன் போல் மிளிரச்- செய்தே
சூனியத்துள் சுழலும் - இந்த
வட்டப் புவியிடையே - வைத்தே
வாஞ்சையில் நான்முழுகிக் - கொண்ட
விட்ட பணி மறவா - தென்றும்
வீறெழும் வாழ்வு நல்காய்
இச்சையகற்றி விடு - எண்ணம்
இன்பத்தி லாழ்த்தி விடு -கொள்ளும்
பச்சை யுணர்வுகளைப் பாவம்
பார்த்தெரி அன்பைக் கொடு - என்னைத்
துச்சம் என்றே நினையா - உன்னில்
தூரம் நிறுத்திவிடா - திங்கே
கச்சிதமாய்க் கவிதை - சொல்லக்
கைகொடு காத்துவிடு

Monday 28 September 2015

ஏக்கத்தில்


நின்னை தொலைவிருத்தி நெஞ்சம் வலியெழுப்ப
நின்றேன் நிமிடம் நகராதோ
பொன்னை மணந்து ஒருபோதும்கலக்கமின்றிப்
போகும் வாழ்வு திரும்பாதோ
இன்னல் பலகொடுத்தேன்  என்னை கரம்பிடித்தாய்
உந்தன் மகிழ்வு பெரிதாக
எனனே செயல் புரிவேன் இந்தோர் உலகமதில்
ஏக்கம் என முடிவும் தகுமோ

செந்தேன் நிலவெழுந்து செல்லும் வானமதில்
சென்றே உனையடைவதென்றோ
தந்தேன் என அருகில் தழுவும் நிலையடைய
தாகமெடுப்ப தெந்தன் தவறோ
பொன்தேர் தனிலிருந்து போகும் வழியில் எழில்,
பொய்கை மலர் நிறைந்த சுனையில்
வந்தே யிருந்து மலர் வாசம்தனை நுகர்ந்து 
வாழ்வைக் கழிக்க வருவாயோ

மந்தம் எழும் மனதில் மாயக் கனவுகளில்
மாற்றம் இனியும் வருமாமோ
சொந்தம் என உனையும் தொட்டே மகிழ்வுகொள்ள
சொல்லும் நாளுமென்று வருமோ
சந்தமிசைக்க கவி  சொல்லும் மனதில் உந்தன்
சிந்தை மலர்ந்து விடுமாமோ
நந்திஎன  விதியும் நடுவில் பிரித்த நிலை
நல்லோர் முடிவைத் தருமாமோ

வந்தே எனதருகில் வாடும் மனதில் சுகம் 
தந்தேன்என்றே மலருவாயோ
விந்தை எனதுவிரல் வீழும் கண்ணீர்துடைத்து 
விம்மல்தனை நிறுத்துமாமோ
பந்தே என எறியும் பல்நேர் விளைமொழியும்  
பதைக்கும் நிலை தருவதுண்டோ 
நொந்தேன் மனம்வலித்து நெஞ்சம் அழுகைவிட்டு
நிகழும் வாழ்வும் திரும்பாதோ
 

Saturday 26 September 2015

நிதம் சக்தி


ஏனிதோ எண்ணம் மனதிருத்தி -அதை
ஏதோ பொருள கொண்டு தான் வருத்தி
தேனிதழாய்மென் மனம் உறுத்தி - அது
தேம்பியழும் விதமாய்ப் படுத்தி
நானில மீதினில் நானுழன்றும் - நதி
நாடும் கடலென்றுனைக் கலந்தும்
வானிலெழுந்த என் தெய்வ சக்தி -நீயும்
வைத்த பாதை ஏனோ முள்நிறுத்தி

மானில் மருள் குணம் கண்ணில் வைத்தாய் - அந்தி
மாலையில் செங்கதிர் தாளவைத்தாய்
தேனில் நிறைபூக்கள் சத்தமின்றி அதன்
தேகம் மலர்ந்து கொண்டாட வைத்தாய்
வானில் ஒளிர்ந்திடும் வட்டக் கதிர் ஒரு
வீசும் பந்தாய் எழும் வீழுவதுவும்
தானியங்கும் வண்ணம் பூமியினை நிதம்
தன்னைச் சுற்றிச் சுழன்றோடச் செய்தும்

ஆகியதாய் அண்டம்மேவியெழும் எங்கள்
ஆதிசக்தி தனை எண்ணியென்றும்
காகிதப்பூப் படைத்தன்பு கொண்டேன் பலர்
காணக் கவிபபூக்கள் மாலைசெய்தேன்
ஆகிட நீ அதனூடே அசைந்தொரு
அற்புதமான ஒளி கொடுத்தாய்
வேகிட என்னுயிர் வாடும் நிலைதன்னை
வேடிக்கை யாகவோ காட்டிநின்றாய்

வாக்கினில் கொள் விதமாக்கி வைத்து அதை
வாழைக்கனி போலினிக்க வைத்து
போக்கினில் மாற்றக்கள் ஊக்குவித்து அதை
போக்கிப் புதிதென தோற்றுவித்து
ஏக்கக்த்திலெம்மையும் ஆழ்த்தி விட்டு அதை
எண்ணக் கைகொண்டெம்மையும் கிள்ளிவிட்டு
கூக்குரலிட் டழுகையிலே ஏனோ
கொட்டும் கண்ணீர்த் துளி பாராநின்றாய்

வலிக்கு தடீ


***************************************
நெருஞ்சி முள்ளும் வலிக்க வில்லை தங்கமே தங்கம் - உனை
நினைந்து மனம் கொதிக்கையிலே தங்கமே தங்கம்
வருஞ் செயல்கள் பலிக்கவில்லை தங்கமே தங்கம்- உள்ளம்
வருந்தி யுடல் துடிக்குதடி தங்கமே தங்கம்
பெருஞ்சினமே பொங்குதடி எதனிலும் எங்கும் - இதன்
பெயரெதுவோ மனம் கசந்தேன் இருளடி எங்கும்
விரும்பி யுள்ளம் துடிக்குதடி விளைவயல் நெல்லும் -எனும்
விதம் வளரும் மன எண்ணமோ வெறுமையில் காணும்

அரும்பும் மலர் சிறுமுகைபோல் அவிழ்ந்திடும் அன்பும்- அதில்
அழகுடனே சிரிக்கும்முகம் அதனையும் எண்ணும்
குரும்பைகட்டி தேரிழுத்து கொண்டது அன்றே -இன்று
குழைந்தஎழில் சிதையுமுன்னே கலைந்ததேன் இன்னும் ‘
தெருவில் மனம் அலையுதடி திரும்பிடநீயும்- என்னை
தொடும்விரல்கள் தொலைந்ததென்ன விழிமூடி நானும்
தரும்வகையில் உனதுஅன்பு தவறிட காணும் -இங்கே
திரும்பி நின்றே தனியுலகம் ரசிக்கவோ நாளும்

வரம்புகட்டி வாழ்ந்தவகை மனமெண்ணி நானும் அந்த
வளர்மதியின் முழுமை கொள்ள வாழ்த்துவ துள்ளம்
பிரமை கொள்ளும் பொழுது கொண்டேன் பேரிடியொன்றே என்னைப்
புறம் விழுத்தி அழவிட என் பெருமை கொண்டாயோ
நிரம்பி உள்ளம் நிம்மதியில் நேர்ந்திடும் வாழ்வில் - எனை
நிர்க்கதியாய் விடுவதிலே நிலைப்பதும் ஏனோ
கரம்பிடித்தால் கைவிடலாம் காரணம் கொண்டால் - அது
கடைசியென ஆகும்வரை காத்திரு கண்ணே

நீரா நெருப்பா`


பூமுடித்தாள் பொட்டுவைத்தாள்
. பூவிதழின் வாச மிட்டாள்
வாகுடிக்கத் தேன் எனவே
. வந்தவண்டைச் சுட்டெரித்தாள்
யார்முடிகொள் காவலனோ
. யௌவனத்தில் கால் பிடிக்கும்
தேர்முடிக்கு ஒப்பஎழில்
. தேகமதில் வார்த்தெடுத்தாள்

பார்வியந்து போற்றுமவள்
. பார்வை யதன் சாயல் பட்டால்
எர்பிடித் துழுவதெலாம்
. எங்கிருந்து கற்றுவந்தாள்
வார் பிடித்து வானஎழில்
. வண்ணமதி மேனிகொண்டாள்
ஊர் பிடித்துத் தூற்றமுதல்
. ஓர்வழியைக் காணுமென்றாள்

கார் விரிந்த கூந்தல்தனைக்
. கோதி யகில் வாசமிட்டா:ள்
மார்பி லெனைத் தாங்கியவள்
. மையல் தந்து போதையிட்டாள்
கீர் எனவெ தேகம் சுற்ற
. கேட்டகாமல் ஆடவைத்தாள்
நேர் பார்த்துவா அழைத்தேன்
. நெஞ்சுக்குட் புகுந்துவிட்டாள்

தூர் எடுத்த மண்ணெனவே
தேகம்குளிர் தோற்றம் கொண்டாள்
தீர் பிடிக்கும் துன்பமென்றால்
. தென்றலென ஆகி வந்தாள்
பூர்வீக புண்ணியமோ பேதை
. எந்தன் மாலை கொண்டாள்
நீரூறும் கண்களினி
. நிச்சயம் காண் ஆனந்தமே

பாசக் குருவிகள்!


*****************
நேசங் கொண்ட குருவிகளே
. நீளப் பறக்கும் வானத்தில்
தேசங்கொண்ட நிலையென்ன
. திரும்ப வந்தால் கூறுங்கள்
வாசங் கொண்டு மலரங்கே
. வண்ண இதழ்கள் விரிப்பதிலை
பேசுங்கிளியும் கிள்ளை மொழி
. பேசா திருக்கு தென்றார்கள்

வீசும் தென்றல் விளையாடா
. வேப்ப மரத்துக் குயில் பாடா
நாசம் எல்லை மீறியதாய்
. நாட்டில் மக்கள் வாழுகிறார்
கூசுங் கொலைகள் களவோடு
. குமரி மேனி கலைத்தாடும்
நீசம் எல்லை காணுவதால்
. நிலவேநீயும் வருவதுண்டோ

மாசும் கொண்டோர் மனமெல்லாம்
. மருகிப் பிறழ்வாய் மனத்தாகம்
பூசும்முகங் கொள் வேடங்கள்
. புரிவோர் மலியப் பொருளுண்டோ
காசுக் கடிமைக் கயவர் கைக்
. காணும் பொம்மை போற்சிலரும்
நேசம் கொள்ளும்மன மின்றி
. நிற்கும் இடமும் மாறியதென்

தேசங்கெட்டே காமுகர்கள்
. திக்கில் எங்கும் திகழுங்கால்
மாசற்றோர் தன் மேனிதனை
. மறைத்தே கரியை முகம்பூசி
வேசம் மாற்றி வெறியோடு
. விலங்காய் திரியும் கயவர் கை
நாசம் தவிர நடைபோடும்
. நம்மூர்ப் பெண்கள் காண்பாயோ

பூசி மஞ்சள் நீராடும்
. பெண்ணின் வதனம் பங்கயம்தன்
பாசிக் குளத்தில் காணும் போல்
. பரந்த கூந்தல் அலையாட
நேசிக்கும் தன் பதியெண்ணி
. நீரின் தழுவல் நாணித்தான்
கூசிச்சிவந்த கன்னத்தில்
. கொய்யா தெடும் கிளி மூக்கு

வாசப் பூவின் மிருதுவினை
. வளைத்தே எடுத்த வாய்மொழியின்
பாசப் பொழிவில் பைங்கிளியின்
. பழமைத் தமிழைப் பயமின்றி
தேசம் மீட்ட திருமகனும்
. திங்களொளியில் கைகோர்த்து
பேசும் போது அச்சமின்றிப்
. பக்கம் இருத்தல் எக்காலம் ?

**************************

Friday 25 September 2015

வாழப் பழகுவோம்

                                      'வாழப் பழகுவோம்

அறிவோடு விளையாடி வெல்லும் வாழ்க்கை 
.  அறமென்ற நிலை கொள்ள வேண்டும்
குறியோடு நம் வாழ்க்கை கொண்டே - நல்ல
.  குணவானாம் இவனென்றே எவர்கூற வேண்டும்
வறியோரை யாம் காக்க வேண்டும் - இன்னும் 
.  வசதியென் றுள்ளோர்கள் தனமீய வேண்டும்
பிறிதென்ற மனமின்றி என்றும் - வாழ்வில்
.  பிறர்மீது அன்போடு மொழிகூற வேண்டும்

களிகொண்டு முகங் காணவேண்டும் - எதைக் 
.  கருதாது துயரின்பம் சமமாக வேண்டும்
வெளிவானின் பிரகாசம் வந்தே - உந்தன் 
.  விழிமீது ஒளியூட்டும் விதம்வாழ வேண்டும்
எளியோரின் சொல் கேட்க வேண்டும் - அன்பை 
.  இறைஞ்சும் நல்வாழ்வுக்கு இறைவேண்டு நாளும்
புளியோடும் அதனோடு போலே - உந்தன் 
.  புறவாழ்வு இருந்தாலும் மனமொன்ற வேண்டும்

அழகான மனை எண்ணவேண்டும் - என்றும் 
.  அவளோடு மனம்விட்டு எது தானும் பேசும்
வழமைகொண் டறிவோடு சிந்தை - தன்னில்
.  வருங்கால நிலையெண்ணி வளம் கொள்ள வேண்டும்
உழவென்று வயலோடி நின்றே - கதிர் 
. எழுந்தாடும் நிலைகாண மகிழ்வானே அவனை
விழுகின்ற நதிபோலவன்றி  அந்த 
.  வெளிவானைத் தொடுகின்ற மலையாக்க வேண்டும்

அளவான குழந்தைகள் எங்கள் - அன்பின்
.  அறம்கொள் இல் லறவாழ்வை இலகாக்கும் எண்ணி
களவோடு பொய்ப் பேச்சுமின்றிக் - கேடு 
.  கயமைகொள் இருள் நீங்கிக் காணுள்ளம் வேண்டும்
தளம்பாத உயரெண்ணம், தாங்கி - நிதம் 
.  தனை நம்பும் மனைகூடி ஒருபாதை கண்டே
இளமை என்றின்பத்தில் வாழ்வை - என்றும்
  .எழுகின்ற கதிர்காக்கும் ஒளிதன்னை வேண்டு!'



அறிவோடு விளையாடி வெல்லும் - வாழ்வில்
. அறமென்ற நிலை கொள்ள வேண்டும்
குறியோடு நம் வாழ்க்கை கொண்டே - நல்ல
. குணவானாம் இவனென்றே எவர்கூற வேண்டும்
வறியோரை யாம் காக்க வேண்டும் - இன்னும்
. வசதியென் றுள்ளோர்கள் தனமீய வேண்டும்
பிறிதென்ற மனமின்றி என்றும் - வாழ்வில்
. பிறர்மீது அன்போடு மொழிகூற வேண்டும்

களிகொண்டு முகங் காணவேண்டும் - எதைக்
. கருதாது துயரின்பம் சமமாக வேண்டும்
வெளிவானின் பிரகாசம் வந்தே - உந்தன்
. விழிமீது ஒளியூட்டும் விதம்வாழ வேண்டும்
எளியோரின் சொல் கேட்க வேண்டும் - அன்பை
. இறைஞ்சும் நல்வாழ்வுக்கு இறைவேண்டு நாளும்
புளியோடும் அதனோடு போலே - உந்தன்
. புறவாழ்வு இருந்தாலும் மனமொன்ற வேண்டும்

அழகான மனை எண்ணவேண்டும் - என்றும்
. அவளோடு மனம்விட்டு எது தானும் பேசும்
வழமைகொண் டறிவோடு சிந்தை - தன்னில்
. வருங்கால நிலையெண்ணி வளம் கொள்ள வேண்டும்
உழவென்று வயலோடி நின்றே - கதிர்
. எழுந்தாடும் நிலைகாண மகிழ்வானே அவனை
விழுகின்ற நதிபோலவன்றி அந்த
. வெளிவானைத் தொடுகின்ற மலையாக்க வேண்டும்

அளவான குழந்தைகள் எங்கள் - அன்பின்
. அறம்கொள் இல் லறவாழ்வை இலகாக்கும் எண்ணி
களவோடு பொய்ப் பேச்சுமின்றிக் - கேடு
. கயமைகொள் இருள் நீங்கிக் காணுள்ளம் வேண்டும்
தளம்பாத உயரெண்ணம், தாங்கி - நிதம்
. தனை நம்பும் மனைகூடி ஒருபாதை கண்டே
இளமை என்றின்பத்தில் வாழ்வை - காண
.எழுகின்ற கதிர்காக்கும் ஒளிதன்னை வேண்டு!

'எண்ணங்களே வாழ்க்கை

எண்ணங்களே நம்வாழ்க்கை - அட
. இதிலெது ரகசியமில்லை
எண்ணங்கள் கற்பனையாகும் - ஆம்
. இதிலொரு புதுமையுமில்லை
எண்ணங்கள் மழை நீர்க்குமிழி - அதன்
. எதுவரை நிலைகொளக் காணும்
மண்ணிடை விழித்திடக் கனவும் - விழி
. மூடிடக் கற்பனை முடியும்

தண்ணொளி வீசிடும் நிலவு - இத்
. தாரகை பொறித்த ஆகாயம்
விண்ணெழில் கீழ்த்திசைப் பரிதி - இருள்
. விடிந்ததும் பூக்கின்ற மலர்கள்
கண்ணெழிற் கற்பனை வாழ்வு - அது
. கசந்திடப் போம்சுடுகாடு
வண்ணக் குழைமொழி வனிதை - இவை
. வாழ்வினில் கற்பனை விம்பம்

எண்ணங்கள் பெருகிடுமிரவு - எமை
. ஏற்றி மயக்கிடும் இமயம்
வெண்பனி மறை மலை தோற்றம் அதில்
விழுந்திடும் கதிர் வரை வெண்மை
வண்ண மெழும் வான் ஒளித்தீ - அது
. வந்து கொளுத்திடும் பூந்திரி
உண்ண உருப்படும் மேனி - அதில்
. உணர்வெரி தணிவெனும் இன்பம்

எண்ணங்கள் விண்வழி பிறவி - அவை
. இருந்தெமை இயக்கிடும்கருவி
அண்ணளவில் பகல் இரவு - இவை
. அமைப்பது ஊறவெனும் புணர்வு
மண்ணிடை எதிர் மறை கவர்ச்சி - இவை
. மனதினில் சுகமெழ விரவி
கண்ணதில் மயங்கிட உருகி - மனக்
. காட்சியின் சூனிய வாழ்வாம்

'வந்த பாதையில் கற்ற பாடங்கள் .

(சந்தவசந்தக் கவியரங்குக்காக எழுதியது)
.
.
பாடுங் குயிலும் பேசும்கிளியும்
.  பாடம் கற்றதில்லை
ஆடும் மயிலும் நடனம் எங்கும்
.  அறிந்தே உற்றதில்லை
கூடும் அலைகள் விரிந்தே ஓடும்
.  கொண்டோர் செல்வரிசை
ஏடும் தூக்கும் இயல்பாய் குருவின்
. இடத்தில் கற்றதில்லை

சூடும் பூவை தென்றல்தொட்டே
.  சிறக்கும் கற்றதில்லை
ஒடும் காற்றின் உரசும் நளினம்
.  உலகிற் படித்ததில்லை
மாடும் கன்றை அம்மாஎன்கும்
.  மனதில் பண்புதனை
தேடும் கல்விஎன்றே கற்றுத்
.  தேர்வும் எழுதவில்லை

பாடும் பட்டலை மாந்தர் அறிவெழப்
.  பள்ளி சென்றிடினும்                  
நாடும் குருவுடை  நல்லோர் சிந்தனை
.  நலனைத் தந்திடினும்
காடும் மலையும் கொண்டோர் பூமி
.  கொள்கையில் வாழுபவர்
ஊடும் இதனில் உள்ளோர் அனுபவம்
.  உண்மைப் பாடங்களாம்

நாடும் மனமும் நலிந்ததே போம்பின்
.  நாமதில் கற்கின்றோம்
கூடுமுறவுகள் கொள்கை பிரித்தார்
.  குற்றம் கற்கின்றோம்
சாடும் பொழுதினில் பொய்களில் ஊறிச்
. சற்றே மதி கொண்டோம்
வாடும் மனதில் சுதந்திரம் அற்றோர்
.  வறுமை கற்கின்றோம்

ஒற்றுமையின்றி ஒரினமேன்மை
.  எழுவதில்லை படித்தோம்
கற்றவர் கூடி கனவுகள் கண்டோம்
.  காரியம் செயல் மறந்தோம்
சொற்களைப் பூட்டி சுயநலம் கொண்டோம்
.  சுற்றிடு முலகினிலே
வெற்றென வாழ்ந்தோம் விடுதலை விட்டே
.  செத்திடக் கற்கின்றோம்'

********************

சோதியை தொழுவோம்

.
சக்தியென்று சித்தம் கொள்ளு ரத்தம் சுட்டுமுன்
சஞ்சலங்கள் போனதென்று புத்தி கூத்திடும்
பக்திஎன்று வாழும் போது பார்த்து வானெழும்
பார்வைகொள்ளா சோதி எண்ணிப் பக்குவம்பெறு
எக்கதிக்கும் ஆழ்ந்திடா தோர் துன்பமேயிலா
இப்பெருத்த பாரில்வாழ்வும் இன்னல்களற்ற
முக்தி வேண்டி கையெடுத்து மேலை வானிலே
மூண்டெழுந்த ஆதிசக்தி முன் பணிந்திடு

வெட்டி நீக்கு கேடு கொள் விரோதஎண்ணங்கள்
விட்டு நீங்குமச் சுகத்தை வேண்டிக் கேட்டிடு
தட்டிக் கைகள் போடு தாளம் சல்சல்லென்றிட
தாவி ஓடும் நீரின் துள்ளல் போல வாழ்வென
முட்டி ஓடவைக்கும் கெட்ட மூர்க்கம் கொள்ளெண்ணம்
மேன்மை வாழ்வில் நீக்கவும் மனம் களிப்புறும்
வட்டியோடு வந்தகாசு விட்டுச் சென்றிடும்
வந்தே அன்னை தந்தவாழ்வு மொட்டவிழ்ந்திடும்

சுட்டுச் சாம்பலாகும் மேனி தூய்மை கொள்ளவும்
சுந்தரப் பொன் வானின் வீச்சொளிக்குள் ஆகவும்
எட்டிப் பாயும் காட்டுவாழ்விலங்கின் கொள்மனம்
இன்றிப் பூ வதன் இதழ்கள் போல் விளங்கவும்
கட்டி மஞ்சள் பூசம் மேனி காமுகர்களால்
கட்டியாள நெஞ்சும்கூசிக் கண்டிருப்பதும்
தட்டிக்கேட்க விட்டிவைகள் நீயெழுந்திடு
தர்மம்காணத் தீரம் வேண்டித் தீயைக் கேட்டெழு

மட்டியோடு மாமடையன் மற்றும்தன்மதி
மட்டமான வன் மங்கை யர்மீது வன்மமும்
இட்டு வாழ்பவன் இரக்க சிந்தையற்றவன்
ஏற்ற வேடமிட்டு இந்த மண்ணில் வாழ்பவன்
சுட்டிநின் விரலைத் தூக்கி சொல்லியே இவர்
சூழ வாழும் தேசத்தோரின் சித்தம் நல்விதப்
பட்டு வாழ்வெனும் தமிழர் வீரம் கொண்டிடப்
பரந்த வானெழுந்த சோதி பக்கம் நின்றுகொள்
*****************

விழித்ததேன்

கண்களே ஏனோ விழித்தீர் - அதன்
. காரணம் ஏது சொல்வீரோ!
மண்ணிடைகாண் அவலங்கள் - அதை
. மாற்றவெனத் திறந்தாயோ
எண்ணப் புரவிகள் பூட்டி - இசைச்
. சந்தமெழும் ரதமோட்டி
விண்ணிற் பறந்திடும் மனமே - இன்று
. விட்டு விழிகொண்டதென்ன

கண்ணிமைக்கக் கருவாகும் - பலர்
. கண்டுகொள்ள ஒளிகூடும்
புண்ணியம் ஏதென அறியேன் - அதில்
. புன்னகை கொண்டுமே நின்றேன்
திண்ணமெது புரியாது - திட
. முண்டோ அதைக் கருதாது
கண்ணிமைத்தால் ஒருகாட்சி,- அங்கு
. கற்பனையில் ஒளிவெள்ளம்

எண்ணமே வாழ்வை இயக்கும் - அது
. எத்திசை என்றிலை ஓடும்
உண்மைகள் தூங்கிடும் இரவில் - அதில்
. உள்ளதென்ன எல்லை காணும்
கண்ணியம் மேவிடக் காத்தல் -` வழி
. காணும் விநோதங்க்ள் யாவும்
வெண்ணிலவை யொத்த தண்மை - கொண்டு
. வெல்லும் விழியொளி கூடும்

தன்னிலை விட்டுமே காணும் - விழி
. தானுறங்கும் நினைவென்றும்
கண்களை மூடுவ தில்லை - அவை
. காட்சி கொண்டே கனவாக்கும்
பெண்கள் இசைத்திட நடமும் - அவர்
. பேச்சிலெழுந்திடும் மனமும்
மண்ணில் இன்பம் பெறும் ஆயின் - இது
. மாபெரும் மேன்நிலை கொள்ளும்

இன்பமொன்றே எழுந்தாடும் - அதில்
. இல்லைத் துயரென்றும் ஆகும்
பன்நிறை மாவளம் கூடும் - உன்
. பங்கெனச் சொர்க்கமும் காணும்
இன்னும் பலப்பல சொன்னார் - இவன்
. இங்குணரும் வகையென்ன
தன்னிலையில் பலவீனம் - அச்சம்
.தாரும் குழப்பங்கள் மிச்சம்

பக்கம் வாராயோ !


துடிக்கின்றேன் துன்பத்தில் தூயவளென் றெண்ணித்
தொலை நின்றும் காணாதேனோ
வடிக்கின்றேன் கண்ணீரை வாயுவர்க்கக் கன்னத்தே
வழிகின்ற நீரோடையோ
படிக்கின்றேன் பாவநூல் பச்சையுடல்நொந்துமே
பரிதவிக்க விட்டும் நீரில்
செடிக்கன்றாய்  சீராகச் செய்வளங்கள் குன்றிடச்
சிதையவும்நீ சிரிப்பதோ

இடிக்கின்றேன் ஆலயத்தை என்மனதில் கொண்ட
இறைவாசல் கதவைப் பூட்டி
பிடிக்கின்ற துயரோடு பெருமிடர்ப் பேய்வந்தே
பிணக்கென்று எனைக் கொள்ளுங்கால்
வெடிக்கின்ற நட்சத்திர வீறோடு விண்பரந்து
விளைசக்தி உன்செயலின்றி
முடிகின்ற தோஉடலும் மோகவுணர் விச்சைதனை
முழுதென்றே உன்னைநாடி

கடிகின்றேன் கைவிரலைத் தோன்றும் வலிதுயர்தானும்
தோற்றுவதென் செயாலாலிதே
குடிக்கின்றேன் போதையுடன் கூந்தல்மலர் கொள்ளிவளென்
குலமகளின் உடல்ஊற்றையே
வடிக்கின்றேன் குருதி சுட்டே வழிகின்ற காயமதில்
வந்தவிதம் அறியாமலே
பிடிகின்றேன் பிடிவாதம் போகும்வழி பிழையென்று
பேதைமனம் பறை சாற்றவே

கடக்கின்றேன் காற்றுவழி கதிரோடு ககனத்தே
காணும்வெளி கன தூரமே
அடக்கின்றேன் இச்சைவழி அத்தனையும்மேனியதில்
அதிர்வெழும் நல்லின்பங்கள் தாம்
முடகின்ற மெய்காணும் மோகவுணர் வின்றாகி
முழுதாக பொறிகொள்ளவே
படக் கண்டும் துன்பமெலாம் பனிமலர்விட்டேகுமப்
பரிதியெனப் பக்கம் வீசாய்

சுடக் கண்டும் நிற்கின்றேன் சூரியனின் வெங்கதிரும்
சூழயிருள் மூடுங்காலை
இடக்கொன்று வருமாயின் இல்லையென்றாக்குமென்
இறையவளே என்னைக் காவாயோ
கிடக்கின்றதோ வழியும் கேள்தாயைக் கேட்டால்
கூனுமிந்த கேவலம் நீங்கி
விடக்கையைப் பொத்தென்று வீழாதெமைக் காவாய்
வேண்டும்நீ வந்தே காப்பாய்

*******************

விசித்திரம்

'விசித்திரம்

சித்திரா ரூபவி சித்திர மொன்றெனைச் 
.  சுற்றி யிழுக்குதய்யா - அது
வித்தையென்றே வந்து வேண்டுவ தென்னதை 
.  வேளை யறியேனப்பா 
புத்துணர்வுதரும் பொன்னளி வந்ததெந்தன் 
.  புத்தியில் சேருதய்யா - இது
சத்துவம் தந்தெனைப் பற்றியதா அது 
.  சாதகமானதுவா
  
மொத்தமெனக் கண்கள் காண்பன தூயநல் 
.  மின்னொளித் தோற்றங்களா - அவை
நித்திய தூக்கக் கனவுகளா முன்னே 
.  நிற்பது பொய்மைகளா
ரத்தினக் கல்லிடை வைத்த பொற்கிண்ணத்தில் 
   இட்டமது வொத்ததா - அவை
புத்தம்புதுச் சுவை கொள்ள மயக்கிடும் 
.  போதை மயக்கங்களா
    
வற்றியகுளத்தை வந்து மினுக்கிடும் 
.  விம்பமென் கானல்களா -அன்றி
எற்றும் அலைகொண்ட இயற்கை வழங்கிய 
. இன்பச்சுனை புனலா
தொற்றிய நோயின் சுவடுகளா இத்
.  தோற்றமும் மாயைகளா  - ஏதும்
அற்றுவாழ்வை இன்ன லாக்கிடும் எண்ணத்தின் 
.  ஆசையென் மாயைகளா

மற்றொரு சோலையில் மாமரக் கொப்பினில் 
.  மாலையில் பாடுங்குயில் - அது
அற்றொரு வேளையில் அண்டங் காகம் அயல்
.  கத்திடக் காணும்ஒலி
முற்றிய நெற்கதிர் மௌனத்திலே தலை 
.  மண்ணில் சரிந்திருக்க - எங்கும்
பற்றிய பச்சை நிறம் பரந்து எழில்
.  பாங்கினில் சோபைகொள்ள

உற்றவன் நானென ஓடிவருந் திங்கள்  
.  ஓங்குமலையொளிக்க - அதன்
பொற்தளிர் மென்னொளி பொல்லாதிருளோட்ட 
.  போதையை பாரெழுப்ப
சொற்குவை கொண்டனன் சுந்தரமாய்க்கவி 
.  சொல்ல ரசித்திருக்க
அற்புதமென்ன அறியாமையி லிவன் 
 ..ஆட மனம் மயங்க 

*******************************'



சித்திரா ரூபவி சித்திர மொன்றெனைச்
. சுற்றி யிழுக்குதய்யா - அது
வித்தையென்றே வந்து வேண்டுவ தென்னதை
. வேளை யறியேனப்பா
புத்துணர்வுதரும் பொன்னளி வந்தெந்தன் 
. புத்தியில் சேருதய்யா - இது
சத்துவம் தந்தெனைப் பற்றியதா அது
. சாதகமானதுவா

மொத்தமெனக் கண்கள் காண்பன தூயநல்
. மின்னொளித் தோற்றங்களா - அவை
நித்திய தூக்கக் கனவுகளா முன்னே
. நிற்பது பொய்மைகளா
ரத்தினக் கல்லிடை வைத்த பொற்கிண்ணத்தில்
இட்டமது வொத்ததா - அவை
புத்தம்புதுச் சுவை கொள்ள மயக்கிடும்
. போதை மயக்கங்களா

வற்றியகுளத்தை வந்து மினுக்கிடும்
. விம்பமென் கானல்களா -அன்றி
எற்றும் அலைகொண்ட இயற்கை வழங்கிய
. இன்பச்சுனை புனலா
தொற்றிய நோயின் சுவடுகளா இத்
. தோற்றமும் மாயைகளா - ஏதும்
அற்றுவாழ்வை இன்ன லாக்கிடும் எண்ணத்தின்
. ஆசையென் மாயைகளா

மற்றொரு சோலையில் மாமரக் கொப்பினில்
. மாலையில் பாடுங்குயில் - அது
அற்றொரு வேளையில் அண்டங் காகம் அயல்
. கத்திடக் காணும்ஒலி
முற்றிய நெற்கதிர் மௌனத்திலே தலை
. மண்ணில் சரிந்திருக்க - எங்கும்
பற்றிய பச்சை நிறம் பரந்து எழில்
. பாங்கினில் சோபைகொள்ள

உற்றவன் நானென ஓடிவருந் திங்கள்
. ஓங்குமலையொளிக்க - அதன்
பொற்தளிர் மென்னொளி பொல்லாதிருளோட்ட
. போதையை பாரெழுப்ப
சொற்குவை கொண்டனன் சுந்தரமாய்க்கவி
. சொல்ல ரசித்திருக்க -கொள்ளும்
அற்புதமென்ன அறியாமையி லிவன்
..ஆட மனம் மயங்க


*

******************************

கனவுகளோ நினைவுகளோ

'கனவுகளோ நினைவுகளோ

*******************************
கானம்பாடும் ஞானம்கொண்டு காணும்குயில் கீதமொன்று
காதினிலே கேட்பதுவும் கனவுகளாமோ
பானமென்று தேனுங்கொண்டு பாலிலிட்ட பழமின்துண்டு
பார்த்துப் பசி தீரக்கொள்ளப் பிரமையென்றாமோ
வானம்நின்று`கேட்பவர்க்கு வாரிஅளித்தாளும் சக்தி 
வாடிமனம் சோரவிடா வண்ண மிட்டாளோ
தேனழகுப் பொன்னிலவு தேவையின்றிக்,காட்டினிலே
தோற்றுமொளி வீச்செனவே தொலைவது நானோ

மானுமுண்டு சிங்கமுண்டு மாந்தரிலே பாம்புமுண்டு
மாயவலை போட்டு மனம் மயக்கியதாரோ
ஊனு முண்டு உள்ளிருந்து ஓடியெழும் உணர்வுக்கொண்டு
ஓங்குமிருள் ஊடொளியை தேடிடுவேனோ
மீனுங்கொண்டு மேலெழும்நீர் மேவுமலை ஆழியிலே
மெல்லக் கரைவிட்ட கயல் துடிப்பது போலே
நானுமுண்டு வாழவென்று நானிலத்தில் கேட்டழவும்
நாலும் புரியாதநிலை நிறுத்துவதேனோ 

சேனைகொண்டு  அரசபடை செல்லும்வழி காவல்கொள்ளா
சீரழிகும் செய்கை அறம் சேர்ந்திடப்போமோ
பானை மொண்டு நீர்சுமந்தே பாதிவழி பார்த்துவந்தும்
பற்றியகை விட்டிடறிப் போட்டுடைப்பேனோ
ஆனையுடன் வேங்கை நரி அத்தனையும் கானகத்தில்
ஆகும் இவையாளும் மனம்  எடுத்திடலாமோ
பூனயும்தான் காணுமெலி போட்டலைத்துச் சீண்டிவிடும்
போலமனம் தூண்டும்வகை புலப்படலேனோ

தேவி உனைக் கைதொழுதேன் தீ ஒளிரும் தாய்மனமே
தேகம் மனம் கொள்ளுரமும் தந்திடு வாயே
மேவி  வரும் துன்பமெனை மீண்டும் மீண்டும் பற்றுவதால்
மேனி படும் இன்னல்களை நீக்கிடுவாயே
காவி மனத் துன்பங்களைக் காலமெலாம் கண்டுலைந்தேன்
காதல்கொண்ட வாழ்வினிமை கண்டிடுமாமோ
ஓவியமும் நீவரைந்தாய் உள்ளஉயிர் நீகொடுத்தாய்
ஓடிவருந் தென்றல் சுகம் உளமெடுக்காதோ'


*******************************
கானம்பாடும் ஞானம்கொண்டு காணும்குயில் கீதமொன்று
காதினிலே கேட்பதுவும் கனவுகளாமோ
பானமென்று தேனுங்கொண்டு பாலிலிட்ட பழமின்துண்டு
பார்த்துப் பசி தீரக்கொள்ளப் பிரமையென்றாமோ
வானம்நின்று`கேட்பவர்க்கு வாரிஅளித்தாளும் சக்தி
வாடிமனம் சோரவிடா வண்ண மிட்டாளோ
தேனழகுப் பொன்னிலவு தேவையின்றிக்,காட்டினிலே
தோற்றுமொளி வீச்செனவே தொலைவது நானோ

மானுமுண்டு சிங்கமுண்டு மாந்தரிலே பாம்புமுண்டு
மாயவலை போட்டு மனம் மயக்கியதாரோ
ஊனு முண்டு உள்ளிருந்து ஓடியெழும் உணர்வுக்கொண்டு
ஓங்குமிருள் ஊடொளியை தேடிடுவேனோ
மீனுங்கொண்டு மேலெழும்நீர் மேவுமலை ஆழியிலே
மெல்லக் கரைவிட்ட கயல் துடிப்பது போலே
நானுமுண்டு வாழவென்று நானிலத்தில் கேட்டழவும்
நாலும் புரியாதநிலை நிறுத்துவதேனோ

சேனைகொண்டு அரசபடை செல்லும்வழி காவல்கொள்ளா
சீரழிகும் செய்கை அறம் சேர்ந்திடப்போமோ
பானை மொண்டு நீர்சுமந்தே பாதிவழி பார்த்துவந்தும்
பற்றியகை விட்டிடறிப் போட்டுடைப்பேனோ
ஆனையுடன் வேங்கை நரி அத்தனையும் கானகத்தில்
ஆகும் இவையாளும் மனம் எடுத்திடலாமோ
பூனயும்தான் காணுமெலி போட்டலைத்துச் சீண்டிவிடும்
போலமனம் தூண்டும்வகை புலப்படலேனோ

தேவி உனைக் கைதொழுதேன் தீ ஒளிரும் தாய்மனமே
தேகம் மனம் கொள்ளுரமும் தந்திடு வாயே
மேவி வரும் துன்பமெனை மீண்டும் மீண்டும் பற்றுவதால்
மேனி படும் இன்னல்களை நீக்கிடுவாயே
காவி மனத் துன்பங்களைக் காலமெலாம் கண்டுலைந்தேன்
காதல்கொண்ட வாழ்வினிமை கண்டிடுமாமோ
ஓவியமும் நீவரைந்தாய் உள்ளஉயிர் நீகொடுத்தாய்
ஓடிவருந் தென்றல் சுகம் உளமெடுக்காதோ

மனம் ஒரு குரங்கு



எத்தனை ஆண்டுகள் பித்தனுடன் யானும்
இப்படி வாழ்ந்திடுவேன் - விழி
பொத்தியதாய் இவன் போகும் வழிகண்டு
பொல்லாத் துயரடைந்தேன்
சத்தியம் என்றொரு பத்தியம் உண்டென்று 
சற்று எடுத்துரைத்தேன் - இவன்
புத்துல கென்றொரு அர்த்தமில்லாவழிப்
போக்கினைக் கையெடுத்தான்

வைத்த காலில் முள்ளு தைக்கு தையோவென
எத்துணை சத்தமிட்டேன் - இவன்
சித்தியற்ற வழி நட்ட நடுக் காட்டில்
சென்றலைந்தே சிதைந்தான்
மெத்தப் படித்தவன் என்றொரு போதையை
முற்றும் தலைக்கெடுத்தே - இவன்
நித்தம் நெஞ்சமழ நீரும் விழிகொட்ட
நஞ்செனு மெண்ணமிட்டான்’

சித்தம்மறுகியோன் செய்கலைவண்ணத்தில்
சித்திரம் ஒன்றெழுதிப் - பின்னே
வைத்த எழிலுரு மீது குற்றுமிட்டு
வாழ்வழகைக் கெடுத்தான்
பத்துகுணங்களும் கொண்டவனாய் உடல்
பக்குவம் தான் கெடுத்தே - காணச்
சொத்தெனக் குப்பையும் சேர்த்து மகிழ்வொடு
மெத்தையென்றே கிடந்தான்

கொத்துமலர் கொண்டோர் சோலை பக்கமுண்டு
கூடிநடப்போ மென்றேன் - இவன்
சித்தம்பிளறியே சுந்தரப் பூங்காவைச்
சொத்தையென மறுத்தான்
புத்தம் புதுக் காலை புன்னகை கொள்ளெனப்
புத்தியெடுத் துரைத்தேன் - விட்டே
செத்தேயெரி சுடுகாட்டினைக் கண்டதும்
சென்றங்கு தூங்குகிறான்

வித்தையில்லை ஒரு முற்றும் வலிமைகொள்
விண்ணெழில் மேகத்தப்பால்
நித்தியமாய் ஒளி நிற்குதே எண்ணென்று
நற்செயல் நானுரைத்தேன்
அத்தனைதூர மிருந்தெமை ஆளுமச்
சக்தியை ஏன் மறந்தான் - சொல்ல
எத்தன் விழிமூடி நித்திரைபோலங்கு
ஏனோ பாசாங்கு செய்தான்

காதலா சே.. சே.. எனக்கொன்றும் தெரியாது!


**************
பசியென்றால் உணவுண்டு கொள்வர் - அதைப்
பலநூறு வகையாக்கிப் பார் என்று சொல்வர்
ருசியென்றா லிதுவென்றே மெச்சி - அதை
ரசியென்றே சுவைஆறு வகைசெய்து ஈவர்
பசிகொண்ட உணர்வொன்று கண்டால் - அதைப்
பலவந்தம் செய்தேனும் பதுக்கென்று கூறி
கசிகின்ற துயர் தன்னை தீரா - அவர்
கண்மீது நீர்பாயக் கதறென்று கொல்வர்

உயிர் கொல்லும் உணர்வொன்றும் உண்டு - அது
உன்மத்த மென்றாக்கத் தலை பித்தம் கொள்ளும்
வயிறிங்கே படும்பாடு கொஞ்சம் - இந்த
வலிமை கொள் நினவங்கே பெரும்பாடு செய்யும்
தயிருண்ணக் குடல் வேட்கை தணியும் - இத்
தவிப்புக்கு எது வேண்டும் தரும் பாதைவிட்டே
துயிலுக்கும் இயல்புக்கும் .துன்பம் - தந்தே
தொலையென்று மதிகெட்டே தெருவிலே தள்ளும்

வெயிலுக்குள் நின்றே பாருங்கள் - அதன்
வெப்பத்தில் துடிக்கின்ற சமுதாயம் ஓனறாம்
பயிலுங்கள் எனப் பாடத்தோடு - இங்கே
பத்தென்ற வயதோடு பயிலென்று கூறி
செயலுக்குள் எதுவாக்கம் காமம் - இந்த
செய்முறை கொள்ளும் நின் தேகங்கள் என்றே0
புயலுக்கு பலியாகும் தன்மை - இன்றிப்
புரிந்துள்ள அறியாமை தொலைத் திடச் செய்ய

அயலுக்கு மேல்நாட்டில் இன்றோ - எங்கும்
அவர்கொள்ளும் கல்விக்குள் காதலும் 0பாடம்,
பயிலென்று தருமெண்ணம் பாரீர் - அது
பலம்கொள்ளும் அறிவென்ப உணர்வினைத்தள்ளி
உயிருக்கு பெரும் வாழ்வு நல்கும் - கொண்ட
உடல்செய்யும் வேட்கைக்கு ஒருபாதை கிட்டும்
பயிருக்கு நீரூற்ற வேண்டும் - இந்தப்
படும்பாட்டுக் கொரு தீர்வு பார்த்தன்பு ஊற்றும்

......................................................................................................................
இத்தோடு நிறுத்திக்கொள்கிறேனே!\
காதல் ஒழித்து மறைப்பதற்கல்ல. பேசுங்கள். தெளிவடையுங்கள்
...................................

என்றும் அருகில் நில்!



நீயிருந்தாய் என்னருகே நினைவெழுமென் கற்பனைகள்
நெஞ்சிலிசை கொண்டினிமையாகவே
தாயிருந்தால் காணும் சுகம் தந்தவள் நீ தந்ததனால்
தானுமெழில் கொண்டொரு சொல்லாகவே
போயிருந்தால் கோவில் சிலை போட்டுடைக்க மண்கலயம்
போகமென்னும் மாயைகொண்ட தேகமே
வாயிருந்தால் வாழ்ந்திடலாம் வாடி நின்றால் தேய்ந்திடவும்
வாழ்க்கைகொண்ட மாயநிலை மாறவே

சேயழுதால் தாயணைக்கும் சேர்ந்தகொடி மரமணைக்கும்
சீறிவரும் மாநதியுமோடியே
தூய கடல் சேர்ந்திணையும் தூக்கம்விழி கொண்டணையும்
துன்பம்வந்து வாழ்வணைக்க முன்னரே
தேயுங் குறைத் திங்களெனத் தோன்றிடாது வாழ்வுதனை
தீயவழி மீண்டு நலம்வாழவே
போயணைப்பாய் உள்ளமதில் பூத்த ஒளி பொலியுவண்ணப்
பேரொளியாம் ஞானசக்தி ரூபமே

கானகத்தில் காணும்மரம் காற்றடிக்க ஊதுமூங்கில்
காட்டருவி கொட்டுமோசை கூட்டியே
வானகத்தில் வெள்ளிசிரித் தாட மறை வெண்முகிலில்.
வீழ்ந்துறங்கிச் செல்லும் நிலா கூடவே
மீனகத்தில் கொண்ட திரை மேவிஎழுங் காற்றினொலி
மீறி எழும் ஆழியலை ஆக்கியே
தானகத்தில் எம்மையெண்ணித் தந்தவுடல் கெட்டுவிட
தாங்கிஎமை ஆட்கொள்ளுவாள் சோதியே